English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Laundry
வெளுப்பகம், சலவையகம்
laureate
n. அரசவைக்கவிஞர்,,ஊதியம்பெற்றுப் பாடும் அரசியற் கவிஞர், பேச்சு முதலிய போட்டிகளிலும் வெற்றி வாகை சூட்டப்பெற்றவர், (பெ.) வெற்றிமாலை சூட்டப்பெற்ற, வாகை சூடிய, வாகை கொண்ட, வெற்றி வாகைக்குரிய, வெற்றி வாகை சூட்டப்பெறத்தக்க.
laurel
n. புன்னைவகை, பாடற்போட்டியில் வெற்றிச் சின்னமான தழை, வெற்றிச்சின்னம், வெற்றித்தினத்துறை ஏற்றம்.
laurel-bottle
n. பூச்சிகளைக் கொல்வதாகப் புன்னை வகையின் இலைகளால் நிரப்பப்பட்ட குப்பி.
laurestinus, laurustinus
n. எப்போதும் பசுமை நிறமுள்ள மலருடைய புதர்ச்செடி வகை.
lava
n. எரிமலைக் குழம்பு, உருகிய பாறைக் குழம்பு.
lavabo
n. ஏசுநாதரின் இறுதியுணவு விழாவின் தற்காலிக சமயகுரு கைகளைக் கழுவும் சடங்கு, கைகழுவும் வினை முறைக்காகப் பயன்படுத்தப்படும் கைத்துண்டு, கை கழுவு தட்டம், துறவிமடத்தின் தண்ணீர்த்தொட்டி, கழுவு கலம்.
lavabos
n. pl. கைகால் கழுவும் அறை, கழுவு நீர்க்கலம்.
lavation
n. கழுவுதல், அலம்புதல்.
lavatory
n. கழுவு நீர்க்கலம், துணி துவைப்பதற்குப் பயன் படும் கலம், கைகால் கழுவும் அறை, சிறநீர் கழிப்பிடம்.
lave
v. (செய்.) கழுவு, குளி, அலம்பு, அலைமோது, அழுகு, நீரோட்டமாகச் செல்.
lavement
n. (மரு.) ஊசிபோடுதல், குடல் கழுவுதல், மூலம் வழி நீர் முதலியன செலுத்தி மலக்குடலைத் தூய்மை செய்தல்.
lavender
n. நறுமணச் செடிவகை, ஆடைகளை மணமூட்ட வைக்கப்படும் நறுமணச் செடிவகையின் மலர்க்காம்புகள், செஞ்சாயலுடைய மென்னீல நிறம், (வினை) துணி முதலியவற்றில் நறுமணச் செடியின் மலர்ப்பூக்காம்புகளை வை.
lavender-water
n. நறுமணப்புதர்ச்செடிவகையின் மலர் காம்பு முதலியவை ஊட்டப்பட்ட நீர்மம்.
laver
-1 n. கடற்பாசி வகை, உண்ணத்தக்க கடற்பாசி இனம்.
lavish
n. நிறைவு, (பெ.)வரையாது கொடுக்கிற, மட்டுமிஞ்சிச் செலவிடுகிற, ஏராளமான விளைவைத் தருகிற, தாராளமான, ஊதாரித்தனமான, அளவு மீறிச் செலவிடுகிற, (வினை) தாராளமாகக் கொடு, மட்டுமீறிச் செலவிடு.
law
-1 n. சட்டம், சட்டத்தொகுதி, அரசியற் சமுதாயத்தின் கட்டமைதி, சட்ட ஆட்சி, அரசியல் ஒழுங்குமுறை, சட்டக் கட்டுப்பாடு, சட்டமுறைமை, சட்டத்துறை, தனித்துறைக்குரிய சட்டம்ம, சட்டக்கல்வி, சட்டப்புலமை, சட்டத்தொழில், சட்டவாசகம், சட்டக்கூறு, சட்டத்துக்குகந்தது, சட்ட ஆட்சிமுறை, சட்ட நடைமுறை, வழக்குமுறை, வழக்கு நிலை, பொதுநீதி, நடைமுறை ஒழுங்கு, செயல் ஒழுங்கு, மரபொழுங்கு, வழக்க முறைமை, விவகார முறை, கட்டளை, மேற்கோள் விதி, கட்டளை விதிமுறை, விதிமுறை வாசகம், இயலமைதி, இயற்கை ஒழுங்கமைதி, மெய் யொழுங்கமைதி, தத்துவம், மெய்ம்மை வாய்ப்பாடு, சூத்திரம், வேட்டை விளையாட்டுப் போட்டிப் பந்தயங்களில் முன்னுரிமைச்சலுகை, நேர்மைச்சலுகை, சலுகை நேரம், ஓய்வு, (வினை) சட்டநாடி வழக்குக்குக்செல், விரைவுபடுத்து.
law-abiding
a. சட்டத்திற்குக் கீழ்ப்படிகின்ற.
law-agent
n. வழக்கு விவரம் திரட்டும் முறைமமன்ற அலுவலர், கீழ்மன்றவழக்குரைஞர், வழக்காடும் உரிமை பெற்றவர்.
law-hand
n. சட்டப்பத்திரங்களில் பயன்படுத்தப்படும் கைஎழுத்து.