English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lattice
n. பின்னல் தட்டி, வரிச்சல், அல்லது தும்பிகளின் பின்னலால் அமைந்த மறைப்பு, பின்னல் வேலைப்படாமைந்த பொருள், பின்னலமைப்புடைய பிழம்புரு, குறுக்குப்பின்னல் கம்பி வலையிட்ட பலகணி, (வினை) வலைப்பின்னலுருவாக்கு, பின்னல் தட்டியமைத்துப் பொருத்து.
lattice-work
n. பின்னல்வளை வேலைப்பாடு, பின்னல் வேலைப்பாட்டமைப்பு.
Latvian
n. பால்டிக் கடலடுத்துள்ள லாட்வியா குடியரசின் குடிமகன், (பெ.) லாட்வியா நாட்டைச் சேர்ந்த.
laud
n. புகழ்ச்சி, புகழ்ச்சிப்பாசுரம், (வினை) புகழ்ந்து பேசு, புகழ்ச்சி செய், கொண்டாடு.
laudable
a. புகழத்தக்க, பாராட்டத்தக்க, புகழ்ச்சிக்கு உரித்தான, (மரு.) உடலியல் சுரப்புநீர் வகையில் உடலுக்கு நலமார்ந்த.
laudanum
n. சாராய அபினிக் கரைசல்.
laudation
n. புகழ்ச்சி, ஏத்துதல், மதித்தல், போற்றுதல்.
laudator temporis deti
n. (ல.) முற்காலமே பொற்காலமென்று விரும்பிய போற்றுபவர்.
laudatory
n. புகழுரை, (பெ.) புகழடங்கிய, புகழ்ச்சியுடைய, புகழ்கிற.
lauds
n. pl. திருக்கோயில் முதற்பகல் வழிபாட்டு வேளை, புகழ்க்கீதம்.
laugh
n. நகை, நகைப்பொலி, ஏளனச்சிரிப்பு, சிரிக்கும் பாணி, நகைக்கும் வகைமுறை, (வினை) சிரி, நகைப்பொலி செய், நகை முகங் காட்டு, ஏளன நகைப்பு நகை, வெறுப்புடன் சிரி, அகமகிழ், களிப்புறு, சிரித்துரையாடு.
laughable
a. சிரிக்கத்தகுந்த, நகைப்புக்கிடமான, நகைப்பைத் தோற்றுவிக்கிற, வேடிக்கையால் மகிழ்ச்சியளிக்கிற.
laughing
n. சிரித்தல், நகைத்தல்.
laughing-gas
n. வெடியத்து உயிரகை, வலிநீக்கும் மயக்க மருந்தாக மூக்கில் உட்கொண்டு பயன்படுத்தப்படும் வெறியூக்கும் வளி.
laughing-stock
n. பழிப்புப்பொருள்.
laughter
n. உரத்த சிரிப்பு, நகைப்பொலி.
launce
n. வேலையிறக்கத்தின்போது மணலிற் புதைந்து கொள்ளும் இயல்புடைய விலாங்குபோன்ற மீன்வகை.
launch
-1 n. கல இறக்கம், கப்பல்-படகு வகைகளில் நீரில் இறக்கும் செயல், கலப்புறப்பாடு, கப்பல்-படகு வகைகளில் துறைபெயர்த்து செல்லுதல், (வினை) தூக்கியெறி, வீசியெறி, கடலில் தள்ளு, மிதக்கவிடு, தொலைக்கனுப்பு, புதிய துறை தொடங்கு, புது முயற்சியில் இறங்கு, முயற்சியை மேற்கொண்டு புறஞ்செல்.
launder
v. சலவைசெய், ஆடைகளை வெளு, ஆடை வகையில் சலவைக்குரிய தாயிரு, வெளுப்புக்கு ஈடுசெய்வதால் இரு.
laundress
n. வண்ணகப் பெண், ஆடை வெளுப்பவள், இங்கிலாந்தில் முறைவர் உரிமை மன்றங்களின் மேற்பார்வை யாளர்.