English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
laterite
n. வெப்பமண்டலச் சாலையமைப்பிற் பயன்படுத்தப்படும் செவ்வண்ண இரும்பகக் களிமண்.
latex
n. (தாவ.) இரப்பர் மரப்பால்.
lath
n. மென்மரப் பட்டிகை, வரிச்சல், (வினை) சுவர்-தளம்-மச்சுக்களுக்கு மென்பட்டிகைப் பாவு.
lathe
-1 n. கெண்ட கோட்டத்தின் ஆட்சித்துறை வட்டங்களின் ஒன்று.
lathe-bearer
n. கடைசல் பிடிக்கும் பொறியின் மையங்கள் அல்லது கொளாவிகளுக்குரிய நிலைச்சட்டம்.
lathe-bed
n. கடைசல் பிடிக்கும் பொறியின் ஏற்பமைவு வாய்ப்புடைய அடிப்பனிச்சட்டம்.
lather
n. நுரை, சவுக்கடி, குதிரையின் வியர்வை நுரை, (வினை) நுரைபடு, நுரையாகு, நுரையால் மூடப்பெறு, மழிப்பதற்காகச் சவுக்கார நுரைதடவு.
lathi
n. (இ.) குறுந்தடி, குண்டாந்தடி.
latifundia
n. pl. பெரும்பண்ணை, நிலங்களின் தொகுதி, பெரும்பண்ணையாட்சி நிலை.
Latin
n. லத்தீன் மொழி, லேஷியம் என்ற பண்டை இத்தாலி நாட்டு மாகாணத்தின் குடியுரிமையாளர், சிறப்புக் குடியுரிமையுடைய இத்தாலி நாட்டவர், பண்டை லத்தீன் மரபில் வந்த மொழியினைப் பேசுபவர், ரோமன் கத்தோலிக்கர், (பெ.) பண்டை ரோமாபுரியினரைச் சார்ந்த, லேஷியம் என்ற பண்டை இத்தாலிய மாகாணத்துக்குரிய, லத்தீன் மொழிக்குரிய, லத்தீன் மொழியிலுள்ள, லத்தீன் மொழி போன்ற, ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்ந்த, பண்டைரோமரின் பழக்கவழக்க மரபுகள பின்பற்றும் மக்களை சார்ந்த, லத்தீன் மரபுவழி மொழிகளைப் பின்பற்றும் மக்களைச் சார்ந்த, லத்தீன் மரபுவழி மொழிகளைப் பேசுகிற, பிரான்ஸ்-ஸபெயின்-போர்ச்சுகல்-இத்தாலி ஆகிய மாநிலங்களுக்குரிய.
Latine
adv. (ல.) லத்தீன் மொழியில்.
Latinity
n. லத்தீன் எழுதுபவரின் மொழிநடை, லத்தீன் மொழிநடைப்பாணி.
latinize
v. சொல்லுக்கு லத்தீன் வடிவங்கொடு, லத்தீன் மொழிப்படுத்து, பண்டை ரோமரின் பழக்கவழக்க மரபுகளுடன் இசைவுபடுத்து, லத்தீன் மரபுத் தொடர்களை வழங்கு.
latitude
n. விரிவகலம், வீச்செல்லை, ஆற்றலெல்லை, வாய்ப்புக்கலம், வாய்ப்பெல்லை, இடவாய்ப்புரிமை, வாய்ப்பெல்லையுரிமை, தாராள மனப்பான்மை, கட்டுப்பாடின்மை, நெகிழ்வு, தளர்வு, தளர்வுரிமை, பொருள்கோள் விரிவெல்லையுரிமை, (நில.) குறுக்கையளவு, நடுவரைகடந்துள்ள கோண அளவு, (வான்) கதிர் வீதியிலிருந்துள்ள கோணஅளவு.
latitudes
n. pl. பரப்பெல்லைகள்.
latrine
n. மலசலம் கழிப்பிடம், கால் கழுவிடம்.
latten
n. பித்தளை போன்ற மஞ்சள் உலோகக் கலவை, (பெ.) பித்தளை போன்ற உலோகக் கலவையாலான.
latter
a. பிந்திய, பின்கூறப்பட்ட, இரண்டில் பின்குறிப்பிடப்பட்ட, பிற்பட்ட, பிற்பகுதியான, பின்வருகிற, பிந்திநிகழ்கிற, பிந்திய நிலையுடைய, தற்காலத்தோடொட்டிய, அணிமைக்காலத்திய, முடிவணித்தான.
latter-day
a. அணிமைக் காலத்துக்குரிய.
latterly
adv. வாழ்க்கையின் இறுதித்தறுவாயில், காலப் பகுதியின் முடிவான தறவாயில், அணிமைக்காலத்தில் சிறிது காலமாக.