English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
law-lord
n. பிரிட்டிஷ் மாமன்ற மேலவையில் சட்டத்துறை உதவிக்குத் தகுதிவாய்ந்த உறுப்பினர்.
law-officer
n. சட்ட அதிகாரி, வழக்குரைஞர் அரங்க முதல்வர்.
law-stationer
n. வழக்குரைஞர்களுக்குத் தேவையான தாள் முதலியவற்றை விற்பவர், பெரிய எழுத்தில் எழுத வேண்டிய வழக்குப்பத்திரங்களை மேற்கொள்பவர்.
law-term
n. சட்டத்துறைச்சொல், முறைமன்ற இருக்கைக் கால எல்லை.
law-writer
n. சட்ட எழுத்தாளர், சட்ட நுலாசிரியர், சட்டப்பத்திரங்களை முறைப்பட எழுதுபவர், சட்ட எழுத்தர்.
lawful
a. சட்ட உரிமை வாய்ந்த, சட்டத்தின் படி அமைந்த, சட்டத்துக்கு மாறல்லாத, சட்ட ஒப்புதல் பெற்ற, சட்டத்திற்கு இயை நிறுவப்பட்ட, முறைப்படி பிறந்த.
lawgiver
n. சட்ட முதல்வர்,சட்டம் செய்பவர், சட்டத்தொகுதியை உருவாக்கியவர்.
lawk, lawks
(பேவ.) வியப்பிடைச் சொல்.
lawless
a. சட்ட ஆட்சியற்ற, சட்டச் செயலாட்சியில்லாத, அமைதியற்ற, குழப்பமிக்க, சட்டமீறிய, சட்டத்திற்குக் கீழ்ப்படியாத, சட்டத்துக்குக் கட்டுப்படாத, கட்டுப்பாடில்லாத, ஒழுங்கு மதியாத, ஒழுக்க வரம்பற்ற, வரம்புமீறிய நடையுடைய, மனம்போனபடி நடக்கிற.
lawmaker
n. சட்டமியற்றநர்.
lawn
-1 n. புல்வெளி, புல்நிலப் பரப்பு, ஒட்ட வெட்டப்பட்ட புல்கரண் பரப்பு, பூம்பொழில், இன்பப் புல்வெளித் தோட்டம்.
lawn-mower
n. புல் அறுக்கும் பொறி.
lawn-sprinkler
n. பூவாளிப் பொறி, புல் தோட்டத்தில் நீர்தௌிக்கும் சுழற் குழாய்ப்பொறி.
lawsuit
n. உரிமைக்கோரிக்கை வழக்கு.
lawyer
n. வழக்குரைஞர், வழக்கரிஞர், சட்ட அறிஞர் மன்றாடி, வழக்கு நடத்தும் ஆட்பேர், சட்டப் பயிற்சியுள்ளவர்.
lax
-1 n. ஸ்வீடன் அல்லது நார்வே நாட்டுக்குரிய பெரிய வெண்செதிள்களுடைய இளஞ்சிவப்பு உணவுமீன் வகை.
laxative
n. குடவிளக்க மருந்து, இளம் பேதிமருந்து, (பெ.) குடலை இளக்குகிற.
lay
-1 n. நாட்டுப்பாடல், சிறுகதைப்பாட்டு, உணர்ச்சிப் பாடல், பறவைகளின் பாட்டு.
lay figure
n. ஆடையணிகளையிட்டுப் பகட்டாகக் காட்டு வதற்குப் பயன்படும் மரத்தாலிணைக்கப்பட்ட மனித உருவம், சிறப்பற்றமனிதன், மதிப்பு ஏதும் இல்லாதவன், புனைகதையில் மெய்த் திறமற்ற பண்போவியம்.
lay-off
n. தொழிலாளியைத் தற்காலிகமாக வேலையினின்று விலக்கி வைத்திருக்கும் காலம் தொழில் துறையில் தளர்ச்சிப் பருவம்.