English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
kerseymeres
n.pl. நேர்த்தியான சாய்வரிக் கம்பளித் துணியால் செய்யப்பட்ட காற்சட்டை.
kestrel
n. குறும்பருந்து வகை.
ketch
n. இருபாய்கள் கொண்ட சிறிய கரையோர மரக்கலம்.
ketchup
n. காளான்-தக்காளி ஆணம்.
ketone
n. கரிமச்சேர்ம வகைகளில் ஒன்று.
kettle
n. கொதி கெண்டி, கைப்பிடி வைத்த வெந்நீர்க் கொதிகலம்.
kettle-drum
-1 n. படகம்,குடமுழாவகை, குறிப்பிட்ட பண்திறத்துக்கேற்ப வரிந்துகட்டப்படுகிற பித்தளையாலான அரையுருளை வடிவத் தோற்கருவி வகை.
kettle-drummer
n. குடமுழவு வகை முழக்குபவர்.
kettle-holder
n. வெந்நீர்க் கெண்டியின் கைப்பிடித் துணி.
kevel
n. (கப்.) முறுக்கும் கயிறுகளைப் பிணிப்பதற்குரிய முளையாப்பு.
key
-1 n. திறவுகோல், மனநிறைவு, வாயில் துணை, புதுமுக வழித் துணை, வழிகாட்டுங் குறிப்பு, விடைக் குறிப்பு, புதிர் விளக்கக் குறிப்பு, விளக்க வரைப்படம், மொழி பெயர்ப்புத் துணைக் குறிப்பு, விடைக் குறிப்பேடு, தளமையம், உயர்மைய இடம், வாயில் தளம், இமைமுகத்தளம், தலைக்கல், கட்டிட வளைவு முகட்டுக்கல், ஆப்பு, இருசாணி, கருவிகளின் விசைக் கட்டை, தட்டச்சுப் பொறியின் விரற்கட்டை, மணிப்பொறியின் முறுக்குக் கட்டை, கயிற்றுப்புரி முறுக்குக் கட்டை, மின் ஓட்டத் திருப்பாணி, அல்லிக்கொத்துவிதை வகை, பூவேலைப் படிவம், சுவர் வகையில் முழ்ல் மேற்பூச்சு, இசையில் கிளைச்சுரத் தொகுதி, கருத்துத் தொனி, போக்கின் முனிமுகம், அடிப்படையான உயர்க்கருத்து, வெற்றியின் உயரிநிலை, ஆட்சிநிலையின் உயிர்நாடி, இயக்கும் உயிர் மூலம், (வினை) திறவுகோலாற் பூட்டு, திருழூக் கட்டையால் திருக்கி இறுக்கு, இசைக்கருவியை முடுக்கு, விடை விளக்கம் அளி, முறுக்கிவிடு, தூண்டு, எழுச்சியூட்டு, விளம்பரத்தில் தனி அடையாளக்கூறு இணை.
key-note
n. உயிர்ப் பண்திறம்.
key-ring
n. திறவுகோல் வளையம்.
keyboard
n. இசைக்கருவிகளில் ஆணிப்பட்டை.
keyhole
n. பூட்டுத் திறவுகோல் துளை.
keynesian
a. ஜான் மெய்னாடு கெயின்ஸ் என்பாரின் முதலாளித்துவ மட்டியல் கட்டுப்பாட்டுவாதம் சார்ந்த.
keys
n.pl. போப்பாண்டவரின் சமயத்துறை அதிகாரம், போப்பாண்டவரின் அதிகார ஆற்றல், மான் தீவிலுள்ள கீழவை.
keystone
n. மையக்கல், வளைவு முகட்டுக்கல், மூலதாரக் கூறு, உயிர்க்கூறு, உயிர்நிலை, உயிர்நாடி.
kgotla
n. தென் ஆப்பிரிக்க பெசுவானாலாந்து நாட்டில் பழங்குடி மக்களின் மூத்தோர் பேரவை.