English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
kid
-1 n. வெள்ளாட்டுக்குட்டி, வெள்ளாட்டுக் குட்டித் தோல், பதனிடப்பட்ட வெள்ளாட்டுக் குட்டித் தோல், (வினை) ஆடு வகையில் ஈனு, குட்டி ஈனு.
kid-glove
a. மெல்லியல் வாய்ந்த, அன்றாட வேலையைத் தவிர்க்கிற.
kidderminster carpet
n. இரண்டு வேறுபட்ட வண்ணங்கள் கொண்ட துணிகளை இடையிணைத்த சமுக்காள வகை.
Kiddies corner
குழந்தைகள் ஆடையகம்
kiddle
n. ஆற்றிணை வலை, கடற்கரைக் கழியடைப்பு வேலை.
kidnap
v. குழந்தைகளைத் திருடு, சட்டத்திற்குப் புறம்பாக ஆட்களைக் கடத்து, வல்லந்தனாகக் கடத்திச் செல்.
kidney
n. குண்டிக்காய், இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக்கி வெளியேற்றும் உறுப்பு, உணவாகப் பயன்படும் ஆடு மாடு பன்றி முதலிய விலங்குகளின் குண்டிக்காய், இயல்பு, குணம்.
kie-kie
n. கூடையாகச் செய்யக்கூடிய இலைகளுடைய நியூசிலாந்து நிலத் தொற்றுச்செடிவகை.
kier
n. வண்ணான் சால், ஆடைகளை வெள்ளாவியில் வைப்பதற்கான பெருமிடா.
kieselguhr
n. பளபளப்பூட்டுவதற்கும் வெடிமருந்து தயாரிப்பதற்குப் பயன்படும் மண்வகை.
kikuyu
n. ஆங்கிலத் திருச்சபையில் விற திருச்சபை உறுப்பினர்களும் தூய நற்கருணையில் பங்கு கொள்ளுதல் பற்றிய விவாதம்.
kilderkin
n. அளவு தேறல்மிடா, தேறல்மிளா அளவு (16 அல்லது 1க்ஷ் காலான்கள்.)
kill
n. கொல்லுஞ் செயல், கொலை, வேட்டையிற் கொல்லப்பட்ட உயிரினம், சொல்லப்ப்ட இரை, புல்வெளிப்பந்தாட்டத்தில் மீட்டு வாராத பந்தடி, (வினை) கொல்லு, நோய்வகை உயர்ப்போக்கு, கொலைசெய், தூக்குலிடு, செடிகொடி உரங்குன்றச் செய், வலுவழி, உணர்ச்சி இல்லாதாக்கு, எதிர்மாற்று வண்ணத்தால் முனைப்பழி, நேரத்தை வீணாகக்கழி, மட்டுமீறிப் போற்தலுக்கு ஆளாக்கு, மட்டு மீறிக் களிப்பூட்டு, மட்டுமிஞ்சிக் கவர்ச்சி செய், சட்டப் பகர்ப்பை முற்றிலும் தோல்வியுறச் செய் உதை பந்தாட்டத்தில் பந்தை அசைவின்றி நிறுத்து, புல்வெளிப் பந்தாட்டத்தில் பந்து மீண்டுவராபடி அடி, மறுத்தொதுக்கு, தள்ளு, களை, கரைசலை நீராளமாக்கு, செறிவு கெடு, உணவுக்குரிய உயிரின வகையில் கொன்றபின் கொழுவிய இறைச்சி தருவதாயிரு, புனைகதையில் பாத்திரஞ் சாவதாகத்தீட்டு.
kill-devil
n. நீரில் சுழலும்படி செய்யப்பட்ட செயற்கைத் தூண்டில் இரை.
kill-time
n. பொழுதுபோக்கு வேலை, காலங்கடத்துவதற்காகச் செய்யப்படும் வேலை, (பெ.) பொழுது போக்குதற்கான, காலத்தை வீணாக்குகிற, காலத்தை வீணாக்கும் நோக்கமுடைய.
killadar
n. கோட்டைப் படைத்தலைவன்.
killer
n. கொல்லுபவர், கொல்லுவது, கொலைஞர், வழக்கமாகக் கொலையிலீடுபடும் கொலைகாரர், இறைச்சிக் கடைக்காரர், விலங்குகளை இறைச்சிக்காக வெட்டுபவர், கொல்லும் கருவி, விலங்குகளை வெட்டும் பொறிக்கருவி, மாற்றுப் பொருட்கூறு, திமிங்கிலகிலம், மூர்க்கமான திமிங்கல வகை.
killick
n. சிறு படகுகள் நங்கூரமாகப் பயன்படுத்தும் பளுவான கல், சிறு நங்கூரம்.
killing
n. கொல்லுதல்,கொலை, கடுங்கோலாட்சி, இரக்கமின்றிக் கடுமையாக நடத்தல், (பெ.) கொல்லுகிற, உயர்போக்குகிற, அழிக்கிற, தடுத்தமைக்க முடியாத, உறு கவர்ச்சியுடைய,அடக்க முடியா நகைத்திறமூட்டுகிற.
killjoy
n. மற்றவர் மகிழ்ச்சியைக் கெடுப்பவர்.