English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
kiln
n. சுண்ணாம்புக் காளவாய், செங்கற் சூளை, சூட்ட சூடு, சூட்டடுப்பிற் காயும்படி செய்.
kiln-dry
a. சூட்டடுப்பிலிட்டுக் காய்ந்த.
kilo(2),kilocurick
n. கதிரியக்கப் பேரலகு, 1000 கதிரியக்கச் சிற்றலகு.
kilocycle
n. வானொலியில் நொடி ஒன்றுக்கு ஆயிர விசை விரையதிர்விலகு.
kilogram,kilogramme
n. ஆயிரச்சீரெடை, பதின்மான எடையளவைப் பேரலகு.
kilogrammeter,kilogrammetre
n. ஆயிரச்சீரெடையை ஒரு சீர்க்கோல் உயர்த்தவல்ல ஆற்றல்.
kiloliter, kilolitre
ஆயிரம் சீர்ப்படி 35,31 கன அடி கொண்ட முகத்தலளவுப் பேரலகு.
kilometer,kilometer
ஆயிரச்சீர்கோல், 32க்ஷ்0,க்ஷ்ஹீ அடிநீளமுடைய பதின்மானப் பேரலகு.
kilowatt
n. ஆயிர மின்பேரலகு, மின்னலகுத் தொகுதி.
kilt
n. ஸ்காத்லாந்து மேட்டு நிலவாணர் அணியும் முட்டளவேயான குறும்பாவாடை, (வினை.) பாவாடையை மேலிழுத்துச் செருகு, ஆடைக்கொசுவம் சுருக்கு.
kilter
n. நல்லுழைப்பு நிலை, பணிச்செப்பநிலை.
kiltie
n. சிறு காற்சட்டையணிந்த ஸ்காத்லாந்து மேட்டுநிலவாணர்.
kin
n. இனமரவுக் குழு, இன உறவு, இன உறவினர் குழாம், குடும்பக் குழு, ஒரே குடும்பத்தினர். (பெ.) இன உறவுடைய, ஒரே குடும்பம் சார்ந்த உறவினரான.
kinchin
n. திருடர் குழூஉக்குறி வக்ஷ்க்கில் குழந்தை.
kincob
n. கொன் அல்லது வெள்ளிச் சரிகையினால் ஒப்பனை செய்யப்பட்ட விலையுயர்ந்த இந்திய பட்டுத்துணி வகை.
kind
n. இனம், மரவின உறவுக்குழு, வகை, செடி உயிர் வகைகளில் இனப்பிரிவு, தனிக்குழு, தனிப்பிரிவு, வகை வேறுபாடு, வகைமாதிரி, மாதிரி, போன்ற வகை, இயற்கை, தன்மை, இயல்பு, பண்பு, சரக்கு, பொருளினம், திருக்கோயில் இறுதி உணா வழிபாட்டின் அப்பத்தேறல்களில் அப்பம் அல்லது தேறல், (பெ.) இறக்கமான, தயவார்ந்த, பாசமிக்க, நட்பிணக்கமான, அன்பான.
kind-hearted
a. இரக்க மனமுடைய, ஈரநெஞ்சம் வாய்ந்த.
Kinder garten
மழலையர் பள்ளி
kindergarten
n. சிறுவர்களுக்குரிய விளையாட்டுமுறைக் கல்விப்பள்ளி.
kindle
v. ஏற்று, பொருத்து, நெருப்புப் பற்றவை, தழலெழுப்பு, ஒளிரச்செய், ஒளிர், தீப்பற்றிக் கொள், நெருப்புப்பிடி அழன்றெழு, தூண்டு, சினமூட்டு, அவா எழுப்பு, உணர்ச்சி கிளறு, ஊக்கு, உள்ளார்வம் எழுப்பு.