English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
kingpost
n. நடுமரம்,கூரைச்சட்டத்தில் கைம்மரங்களின் கீழ் முனைகளை இணைக்கும் கட்டையின் மையத்திலிருந்து செங்குத்தாக உச்சி வரையில் மேலெழும்பும் கம்பம்.
kingship
n. குருதித் தொடர்புடைய உறவினர்.
kink
n. குணக்கல், கோட்டம், கம்பி-சங்கிலி அல்லது கயிற்றில் விழும் இடைமுறுக்கு, மனக்கோட்டம், மனக்கவிவு, கொக்கி, கொளுவி, (வினை) முறுக்குவிழு, குளக்கலுறு, முறுக்கிக்கொள், கயிற்றில் முளுக்கு விழச்செய்.
kinkajou
n. இரவுநடமாட்டமுடைய ஊனுண்ணும் மஜ்ம் வாழ் அமெரிக்க விலங்குவகை.
kinnikinic
n. அமெரிக்க இந்தியர்கள் புகையிலைக்குப் பதிலாகப் பயன்படுத்தும் கலவைப்பொருள் வகை, புகைக்கும் கலவைப் பொருள்வகை தருஞ்செடி.
kino
n. மருந்துவகையிலும் தோல் பதனிடுவதிலும் துவர்ப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படும் வேங்கை மரவகையின் பிசின்.
kinsfolk
n.pl. குருதித் தொடர்புடைய உறவினர்.
kinship
n. அரசு, அரசபதவி, அரசநிலை, அரசருக்குரிய மதிப்பு.
kiosk
n. எளிய கட்டமைப்புடைய திறந்த கூடாரம், செய்தித்தாள் முதலியவை விற்பதற்கான எளிய கட்டமைப்பு வாய்ந்த வெளிப்புறக்கடை, பொதுத்தொலைபேசிக்கான வெளிப்புறக் கட்டமைப்பு, பொதுத் தொலைபேசி அமைவு.
kip
n. பதனிட்டுப் பயன்படுத்தப்படும் இளவிலங்கின் தோல்.
kipper
n. முட்டையில் பருவத்தில் மீன்வகையில் ஆண் இனம், மீன் உணங்கல், உப்பிட்டு உலர்த்தப்பட்ட மீன் வகை, (வினை.) மீன் வகைகளை உப்பிட்டு உணக்கு.
kirghiz
n. காஸ்பியன் கடற் கரையில் வாழும் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர், காஸ்பியன் கடற்கரையில் வாழும் மங்கோலிய இனத்தவர் மொழி, (பெ.) காஸ்பியன் கடற்கரையில் வாழும் மங்கோலிய இனத்தைச் சார்ந்த.
kirk
n. வடஇங்கிலாந்து ஸ்காத்லாந்து வழக்கில் திருக் கோயில்.
kirk-man
n. ஸ்காத்லாந்து நாட்டுத் திருச்சபை உறுப்பினர்.
kirsch,kirschwasser
n. காட்டுப் பழவகைகளின் புளிப்பேறிய தேறலிலிருந்து வடித்து இறக்கப்படுஞ் சாராய வகை.
kirtle
n. மேலங்கி, உள்ளுடை வகை.
kiss
n. முத்தம், மேசைக் கோற்பந்தாட்டத்தில் பந்துகளுக்கிடையே நேரும் மோதல், இனிப்புத் தின்பண்ட வகை, (வினை) முத்தங்கொடு, முத்தமிடு, மேசைக்கோற் பந்தாட்ட வகையில் பந்துடன் பந்து மோதச் செய்.
kiss-in-the-ring
n. இளைஞ்களிடையே ஒருவர் வேறு பாலராயுள்ள மற்றொருவரைத் துரத்திக் கொண்டுபோய் முத்தமிடும் விளையாட்டுவகை.
kiss-me-quick
n. செடிவகை, மகளிர் தலையில் பின்புறமாக மிகச் சாய்வாக வைத்துக்கொள்ளும் சிறுதொப்பி வகை, குட்டையான முன் மயிர்ச்சுருள்.