English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
kkoran
n. இஸ்லாமியர் திருமறை.
klaxon
n. உந்துவண்டியின் மின்விசை ஊதுகுழல்.
klepht
n. (வர.) துருக்கிய வெற்றியின்பின் (15-ஆம் நூற்றாண்டில்) கிரேக்க அல்லது அல்பேனிய நாட்டிலுள்ள மலைப் பகுதிக் கொள்ளப படைவீரர்.
kleptomania
n. திருட்டுச்செயலில் ஆர்வம், திருட்டார்வக் கோளாறு.
klipspringer
n. தென் ஆப்பிரிக்க சிறு மான்வகை.
kloof
n. தென் ஆப்பிரிக்காவில் குறுகிய மலைஇடுக்கு, மலைவிடர், பள்ளத்தாக்கு.
knack
n. தனிப்பயிற்சித்திறம், தனிநய நுட்ப ஆற்றல், பயில்திறப்பண்பு, தனிச் செயற்பண்பு, தனிப்பேச்சுநடைப்பழக்கம், நுண்விசைப்பொறி, விளையாட்டுப் பொறி, நுட்பச் சூழ்ச்சித்திறம்.
knack;er
n. அடிவிலங்காளர், பயனற்ற குதிரைகளை வாங்கிக்கொல்லும் தொழிலுடையவர், கழிபொருள் வணிகர் மூலப் பொருள்களுக்காகப் பழையவீடுகள்-கப்பல்கள் முதலியவற்றை வாங்குபவர்.
knag
n. மரக்கணு, கிளையின் அடித்தூறு.
knap
-1 n. சிமையம், குன்றின் குடுமி, மேட்டுச்சரிவான நிலம்.
knapsack
n. சடங்கம், அசம்பை, இரட்டு அல்லது தோலாலான படைவீரர் அல்லது பயணக்காரர் தோள்பை.
knapweed
n. உறுதியான காம்பும் ஊதாமலர்களுமுடைய சாதாரண களைப்பூண்டு வகை.
knar
n. மரக்கணு, கரணை, அடிமரத்திலோ வேரிலோ பட்டையால் மூடப்பட்ட கரடு.
knave
n. வீணன், குறும்பன், போக்கிரி, படைவீரன் அல்லது பணியாள் உருவம் தாங்கியுள்ள ஆட்டச்சீட்டு.
knavery
n. நாணயக்கேடு, நேர்மையின்மை, சுயமை.
knead
v. மாப்பிசைந்து ரொட்டி சுடு, களிமண் பிசைந்து மட்பாண்டஞ் செய், கல, ஒன்றுபடுத்து, பற்றவை, உடம் படித்துவிடு
knee
n. முழங்கால் முட்டு, முழங்காலை மூடும் ஆடைப்பகுதி, வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்றபொருள், முடக்கு வளைவுள்ள இரும்பு அல்லது மரத்துண்டு, (வினை.) முழங்காலினால் தொடு, பணிச்சட்டம் முதலியவற்றின் முடக்கு வளைவான இரும்பு அல்லது மரத்துண்டினால் இறுக்கு, (பே-வ.) காற்சட்டையை முழங்காலண்டை புடைத்திருக்கச் செய்.
knee-breeches
n.pl. முழங்கால் வரையிலோ அல்லது அதற்குச் சற்று கீழாகவோ உள்ள காற்சட்டை.
knee-cap
n. முழங்கால் சில்லு, குதிரைகளின் முழங்கால்களுக்குரிய காப்பு மூடி.