English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
knife-rest
n. கத்தித் தாங்கி, உணவுமேசையில் கத்தி கவர்முள் ஆகியவற்றை வைப்பதற்கான உலோகம் அல்லது கண்ணாடியாலான கட்டை.
knight
n. வீஜ்த் திருத்தகை, ஆண்டகை, கருணைமறவன், மாதர்களுக்கும் நலிவுற்றோர்களுக்கும் நல்லாதரவு நல்கிக்காக்கும் வீரன், வீறார்ந்த பெருந்தகை, நற்பணிக்காக மன்னரால் மதிப்புக்குரிய படைத்துறை நிலைக்கு உயர்த்தப்பட்ட உயர்குடிப்பிறப்பினர், பண்பார்பெருந்தகை, படைத்துறை நிலைக்கு உயர்ந்தவர், வீரப்பெருந்தகைப் பட்டம் வழங்கப் பெற்ற உயர்குடிப்பிறப்பாளர், (வர.) மாமன்ற வட்டப்பேராள், கோட்டம் அல்லது வட்டத்துக்கு மாமன்றத்தில் பிரதிநிதியாயிருப்பவர், பணடைய ரோம் நாட்டில் குதிரைப் படையைச் சேர்ந்த ஒருவர், பண்டைய கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகரில் இரண்டாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்ட குடிமப்ன், சதுரங்க ஆட்டத்தில் குதிரைத் தலையுடைய காய், (வினை.) ஒருவருக்கு வீரத்திருத்தகைப் பட்டம் வழங்கு.
knight-marshall
n. அரசன் அரண்மனைக்கு பன்னிரண்டு கல் தொலைவுக்குட்பட்ட எல்லையில் நடைபெறும் குற்றங்கள் நடவாமற் காத்த முற்காலப் பணியாளர்.
knight-service
n. (வர.) படைத்துறைப் பணிக்கான மானியமுறை.
knightage
n. வீரத்திருத்தகையினர் தொகுதி, வீரத்திருத்தகைகளின் வரலாறடங்கிய பட்டியல்.
knighthood
n. வீரத்திருத்தகைப் பட்டம், வீரத்திருத்தகை நிலை, வீரத்திருத்தகையோரின் படித்தரம், வீரத்திருத்தகை அமைப்பு.
knightly
a. வீரத்திருத்தகைக்குரிய, வீரத்திருத்தகைக்குகந்த, வீரத்திருத்தகை போன்ற.
knit
v. துன்னு, பின்னியிழை, வலையாகப் பின்னு, துன்னலுறு, பின்னி இணைவுறு, துன்னி உருவாக்கு, பின்னல்வேலை செய்து உண்டுபண்ணு, சுரி, நெரி, சுருக்கமுறுவி, நெரிப்புறு, சுருக்கமுறு, நெருங்கியிணை, ஒன்றுபடுத்து, கூட்டி ஒன்றாக்கு, செறிவுறுத்து.
knitting
n. துன்னுதல், பின்னல்வேலை, ஒன்றுபடுத்தல்.
knitting-needle
n. துன்னூசி, துன்னுகோல், பின்னலிழைக் கோல்.
knittle
n. புரியிழையினாலான சிறிய நூற்கயிறு.
knob
n. குமிழ், முளையுருளை, உருள்புடைப்பு, கொம்மை, குமிழ்வடிவக் கைப்பிடி, சர்க்கரை-நிலக்கரி முதலியவற்றின் சிறு கட்டி, (வினை.) குமிழ் இணைவி, புடை, வீங்கு, உப்பு
knobbed
a. குமிழ் இணைவுற்ற, குமிழினையுடைய, குமிழ் நிரம்பிய, சிறு புடைப்புக்களையுடைய.
knobble
n. சிறு புடைப்பு, கணு.
knobby
a. புடைப்புக்கள் நிறைந்த, கணுக்கள் உள்ள.
knobkerrie
n. தென்னாப்பிரிக்கர் ஆயுதமாக வழங்கும் குமிழ்ப்பிடியுள்ள குறுந்தடி,
knobstick
n. படைக்கலம் என்னும் வகையில் குமிழ்த் தலைப்புடைய தடி, வேலைநிறுத்தக் காலத்தில் வேலைக்குச் செல்பவர்.
knock
n. திடீர் அடி, தட்டுதல், தாக்குதல், இடிப்பு, குத்து, கொட்டு, இயந்திரத்தினுள் கோளாறு காரணமாக எழும் உள்வெடிக்பொலி, (வினை.) வலங்கொண்டடி, மொத்து, இடி, குத்து, கொட்டு, மோது, மோதப்பெறு, அறைந்து உட்செலுத்து, அடித்து வெளியேற்று, கதவைத்தட்டு, தடதடவென்றடித்துக்கொள், தடதட ஓசை உண்டுபண்ண, இயந்திர வகையில் தடதடவென்றோசை உண்டாகப்பெறு, அடித்துத்தாக்கு, அடிகள் மூலம் வழங்கு, அடிகள் மூலம் செய்துமுடி, அடித்து வீழ்த்து, ஏலத்தில் சுத்தியடித்துப் பொருளை வழங்கு.
knock-down
n. தெருச்சண்டை, அருகில் உள்ளவ கலந்து கொள்ளும் கைகலப்பு, (பெ.) அடிவகையில் வீழ்த்துகிற, விஞ்சி மேற்செல்கிற, அடக்குகிற, ஏல விற்பனையில் கேட்கப் பரம் விலை வகையில் மிகக்குறைந்த, கொள்முதல் வைப்பான.
knock-kneed
a. தெற்றலுக்காலுடைய.