English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
knuckle-bone
n. கைமுட்டி எலும்பு, ஆடு முதலிய நாற்கால் விலங்குகளின் கால்முட்டி எலும்பு, குதிரையின் முட்டெலும்பு.
knuckle-bones
n.pl. ஆடு முதலியவைகளின் முழங்கால் முட்டி எலும்புகளைக் கொண்டு ஆடப்படும் விளையாட்டு வகை.
knuckle-duster
n. முட்டிக்காப்பு, கைமுட்டியால் அடிக்கும் போது ஊறு நேராதபடிக் காப்பதற்கான உலோக உறை.
knur,knurr
அடிமரக் கணு, முண்டு, காழ்ச்செறிவு, இங்கிலாந்தின் வடபகுதியில் ஆடப்படும் ஆட்டத்திலுள்ள மரப்பந்து.
knurl
n. முடிச்சு, கணு, தட்டெழுத்துப் பொறியில் அச்சழுத்துத் தாள் தகட்டைத் திருப்புங் குமிழ், உலோக வேலையில் விளிம்பு அமைவு.
koa
n. 'சான்டுவிச்' தீவுகளிற் காணப்படும் வேல மரவகை.
koala, koolah
ஆஸ்திரேலியாவிலுள்ள மரம் வாழ் பாலுணி விலங்கு வகை.
kobold
n. செர்மானியரின் பழங்கதை மரவில் நற்கூளி, சுரங்கங்களில் வாழும் அடி நிலக் கூளி.
kodak
n. தொடர்படமெடுக்குந் தகட்டுச் சுளயுடைய நிழற்படக் கருவி, (வினை) தொடர்சுரளைக் கருவிகொண்டு நிழற்படம் பிடி, காட்சியை மிகு விரைவாக நிழற்படம் பிடி, தோற்றத்தை விவரித்துக் கூறு.
koh-I-noor
n. புகழ்பெற்ற தென் இந்திய வைரம், இனத்திற் சிறந்தது, மிகச் சிறந்த பொருள்.
kohirabi
n. இங்கிலாந்திற் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுங் கோசுக்கீரை வகை.
kohl
n. மைக்கற்பொடி, அஞ்கனம், கண்ணுக்குத் தீட்டும் மை.
koine
n. கிரேக்க இலக்கிய காலத்துக்கும் கீழை ரோமப் பேரரசுக் காலத்துக்கும் இடைப்பட்ட ஊழியின் பொதுநிலைக் கிரேக்க இலக்கிய வழக்குமொழி.
kolarian
n. கோலர், வங்காள மலைகாடுகளிலுள்ள ஆரியர்களல்லாத தொல்பழங்குடியினர், (பெ.) கோலர் இனத்தைச் சேர்ந்த.
kolinsky
n. சைபீரியாவிலுள்ள நில-நீர்வாழ் விலங்கு வகையின் மென்மயிர்த்தோல்.
komsomol
n. ருசியாவின் பொதுவுடைமை இளைஞரமைப்பு.
koodoo
n. தென் ஆப்பிரிக்காவிலுள்ள சு கொம்பும் வெண்ணிறக் கோடுமுடைய பெரிய மான் வகை.
koppie,kopje
தென் ஆப்பிரிக்கவில் சிறு குன்று.