English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
korfball
n. ஆலந்து நாட்டுக் கூடைப்பந்தாட்ட வகை.
kosher
n. யூதர்களின் மரபுச்சட்டத்தின்படி செய்து விற்கப்படும் உணவு அல்லது உணவுக்கடை, (பெ.) யூதர் மரபுணவுக்குரிய, யூதர் மரபுணவு மனைக்குரிய.
kotow
n. கீழ்ப்படிதலின் அறிகுறியாக நெற்றி நிலத்தில் படும்படி வணங்குஞ் சீனர் வணக்கமுறை, (வினை.) சீன மரபுப்படி நெற்றி நிலத்திற்பட வணக்கஞ் செய்.
kotwal
n. இந்தியத் தலைமை ஊர்க்காவலர், குற்ற நடுவர், தண்டலாளர்.
koumiss
n. குதிரைப்பாலிலிருந்து தயாரிக்கப்படும் புளிப்பான குடிவகை.
kourbash
n. துருக்கி எகிப்து நாடுகளில் தண்டணைக்குரிய சாட்டைவார்.
kpharmacology
n. மருந்துப் பொருளியல்
kraal
n. சுற்றிலும் வேலியாற் சூழப்பட்ட தென் ஆப்பரிக்க கிராமம், ஆடுமாடு அடைக்குந் தொட்டி, வேலியிடப்பட்ட பட்டி.
krait
n. வங்காளத்திற் காணப்படும் கடு நச்சுப்பாம்பு வகை.
kraken
n. நார்வே நாட்டுக் கடலோரப்பகுதிகளிற் காணப்படுவதாகக் கருதப்படும் பழங்கதை மரபுக்குரிய கடல் வேதாளம்.
krans
n. தென் ஆப்பிரிக்காவிற் சுவர்போல் மேற்கவிந்து நிற்கும் பாறைகள்.
kremlin
n. ருசியாவில் மாஸ்கோ நகரிலுள்ள அரசியல் கட்டிடமாகிய உட்கோட்டை மாளிகை.
kreutzer
n. செர்மனி ஆஸ்திரியா நாடுகளில் முன்பு வழங்கிய வெள்ளி செம்பாலான சிறு நாணயம்.
kriegspiel
n. போர் மாதிரி விளையாட்டு, வரைபடங்களின் மேல் மரக்கட்டைகளைப் போர்வீரர்களாகக் கொண்டு நகர்த்திச் செல்லும் ஆட்ட வகை.
kriliumn,.
நில அரிப்பைத் தடுக்கும் தூள் வகையின் வாணிகப் பெயர்.
krishnasim
n. கண்ணன் வழிபாடு.
kromesky
n. கொத்திய கோழிக்குஞ்சின் இறைச்சி உட் பொதிந்த பன்றி இறைச்சிப் பொரியலுணவு வகை.
krone
n. டென்மார்க்-நார்வே-ஸ்வீடன் முதலிய நாடுகளிற் பழக்கத்திலிருக்கும் வெள்ளி நாணயம், முற்கால ஆஸ்திரியா நாட்டின் வெள்ளி நாணயம், முற்கால செர்மனி நாட்டுத் தங்க நாணயம்.
kroo,krou,kru
0*மேலை ஆப்பிரிக்காவில் லைபீரியா நிலத்தின் கரையோரப் பகுதியில் உள்ள திறமைவாய்ந்த கடலோடிகளான நீக்ரோ இனத்தவர், (பெ.) லைபீரியா நிலத்து நீகிரோ இனத்தைச் சார்ந்த.
krypton
n. (வேதி.) மறையம், ராம்சே என்பவரால் 1க்ஷ்ஹீக்ஷ் ஆம் ஆண்டிற் கண்டுபிடிக்கப்பட்ட அரிய இயைபியக்கமற்ற ஆவித்தனிமம்.