English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
kalmuck,kalmyk
காஸ்பியன் பகுதிகளில் வாழும் மங்கோலிய இனத்தினர், மங்கோலிய இனத்தினரின் மொழிவகை, (பெ.) மங்கோலிய இனத்தினரின் மொழிவகை சார்ந்த.
kalong
n. மலேய நாட்டுப் பழந்தின்னி வெளவால் வகை.
kalpa
n. கற்பம், நான்முகன் நாள் (432 கோடி ஆண்டுகள்)
kamerad
v. சரணடை, சரண்புகவரும் செர்மானிய இராணுவ வீரர் கூறுஞ் சொற்றொடர்.
kami
n. ஐப்பானிய மாகாணத்தலைவரின் விருதுப் பெயர், ஐப்பானிய தெய்வம்.
kamikaze
n.pl. தற்கொலைப்பாங்கான தாக்குதலில் ஈடுபடும் ஐப்பானிய விமானிகள், தற்கொலைப்பாங்கான போர் முறை.
kamptulicon
n. தரைவிரிப்புத் துணிவகை, ரப்பர் ஒரு வகைப்பிசின் தக்கை நெட்டி இவற்றின் கலவை மேல்பூசப் பட்ட இரட்டுத்துணி வகை, தொய்வகம் பிசின் கட்டை நெட்டி ஆகியவற்றாலான தள விரிப்பு இரட்டு.
kanaka
n. தென்கடல் தீவு வாணர், ஆஸ்திரேலிய மாநிலத்தில் முன்பு குவின்ஸ்லாந்து வட்டாரத்தில் கரும்புத்தோட்டத் தொழிலாளியாகச் சேவைசெய்து வந்துள்ள தென்கடல்தீவு வாசி.
kanarese
n. கன்னட நாட்டவர், கன்னட மொழி.
kangaroo
n. பைம்மா, கங்காரு, ஆஸ்திரேலியா மாநிலத்தில் குட்டியினை வைத்துக்கொள்ளக்கூடிய வயிற்றுப் பையையுடைய விலங்குவகை.
kanoon
n. ஐம்பது முதல் அறுபது நரம்புகளைக் கொண்ட யாழ்வகை.
kantian
a. காண்ட் என்ற செர்மானிய நாட்டுத் தத்துவ அறிஞருக்குரிய.
kaolin
n. பீங்கான் செய்யும் மென்மையான வெண்ணிறக் களிமண்வகை.
kapellmeister
n. இசைக்குழு இசைநாடகம் பாடகர் தொகுதி முதலியவற்றை இயக்குபவர்.
kapok
n. இலவம்பஞ்சு, மிகச்சிறந்த மென்மையான பஞ்சுவகை.
kappa
n. கே என்னும் கிரேக்க எழுத்து.
karaite
n. திருநூல்களின் சொற்களுக்கு நேரிடையான பொருள் கொள்ளும் கிரிமியா என்ற ருசிய நாட்டுப் பகுதியிலுள்ள யூதமரபுக் கிளையினர்.
karma
n. கர்மம்,முன்வினைப் பயன்.
karoo,karroo
தென் ஆப்பிரிக்காவிலுள்ள உயர்ந்த களிமண் மேட்டு நிலம்.
kaross
n. தென் ஆப்பிரிக்க தொல்பழங்குடியினர் வழங்கும் மயில் நீக்கப்படா விலங்குத்தோல் ஆடை.