English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
knock-knees
n.pl. தெற்றுக்கால், நடக்கும்போது ஒன்றோடொன்று மோதும் முட்டிக்கால்கள்.
knock-out
n. படுகுலையடி, மீண்டெழாதபடி குத்துச் சண்டைக்காரனை அடிக்கும் அடி, ஏல விற்பனையில் குறைவிலையில் வாங்கிவிட உடந்தையாயிருப்பவர், (பெ.) குத்துச் சண்டை குத்து வகையில் எதிரியை எழாதவாறு வீழ்த்துகிற.
knockabout
n. பகட்டாரவாரமும் இரைச்சலுமுடைய இசையரங்கு, அலைந்து திரிதல், (பெ.) பகட்டாரவாரமுள்ள, இரைச்சலான, துணிவகையில் முரட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தத்தக்க.
knocker
n. மோதுபவர், தட்டுபவர், கதவுதட்டும் கைப் விட, சுரங்கங்களில் வாழ்ந்து கொண்டு உலோகக் கனிப்பொருள் இருக்குமிடம் தட்டிக் காட்டுவதாகக் கருதப்படும் கூளித்தெய்வம்.
knoll
-1 n. சிறுகுன்று, மேடு.
knot
-1 n. முடிச்சு, சிக்கல், நெருடு, இடர், புதிர், பிரச்சனை, உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை, (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு, 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு, விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம், விலங்கினது உடம்பிலுள்ள கெட்டியான மொத்தைக்கட்டி, செடியின் காம்பு-கிளை அல்லது வேரில் காணப்படும் புடைப்பு, அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுங் கெட்டியான திரட்சி, அறுக்கப்பட்ட பலகையில் இத் திரட்சியினால் ஏற்படும் எதிரிழைப்பகுதி, செடிக்காம்வின் கணு, தொகுதி, கூட்டம், கணம், குலை, கொத்து, சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான இரட்டைத்தோள் சும்மாடு, (வினை) கயிறு முடிச்சிடு, முடிச்சாகக் கட்டு, ஆடை ஓர முடிச்சுக்களிடு, முடிச்சுக்களிட்டு ஆடைக்கரைகளுண்டாக்கு, புருவம் நெரி, நெருக்கமாக ஒன்றுபடுத்து, சிக்கவை, சிக்கப்படுத்து.
knot-grass
n. சிக்கிக்கொண்டு படருந் தண்டுகளையும் இளஞ்சிவப்பு மலர்களையுடைய களைப்பூண்டு வகை.
knotty
a. முடிச்சுக்கள் வாய்ந்த, கணக்கள் நிரம்பிய, புதிரான, விளக்க முடியாத.
knotwork
n. பின்னப்பட்டுள்ள கயிறுகள் கொண்ட ஒப்பனை வேலைப்பாடு, சித்திர வேலைப்பாடமைந்த தையல் வேலை வகை.
knout
n. அடியால் உயிர்போக்கவல்ல ருசிய நாட்டு முற்காலச் சவுக்கு, (வினை.) ருசிய சவுக்கினால் அடி.
know
n. தெரிநிலை, போதிய தகவல் பெற்றுள்ள நிலை, அறிய வேண்டுவனவற்றை அறிந்துள்ள நிலை, (வினை) அறி, தெரிந்திரு, தகவல் உடையவராயிரு, ஐயமற உணர்ந்து கொண்டிரு, அடையாளமறி, இனங் கண்டுகொள், பெயர் விவஜ்ந் தெரிந்திரு, திரித்தறி, வேறு பிரித்துணரும் ஆற்றலுடையவராயிரு, அனுபவத்தாலறி, உவ்ர், நன்கு தெரிந்திரு, பழகியறிந்திரு, பாலினத்தொடர்பு கொண்டிரு, தேர்ச்சி பெற்றவராயிரு புலமையிடையவராயிரு.
know the time of day
முழு விழிப்புடனிரு, விவரமறிந்திரு,
know-all
n. எல்லாந் தெரிந்தவர், எல்லாந் தெரிந்ததாகச் சொல்லிக் கொள்பவர்.
know-how
n. வழிவகையறிவு, செவ்விக்கேற்ற சரியான வகைமுறை நுண்ணறிவாற்றல்.
know-nothing
n. அறிவிலி, ஐயறவுக் கோட்பாடுடையவர்.
knowing
a. அறிவுள்ள, விரகுடைய, சூழ்ச்சித்திறமுள்ள, முழு விழிப்புடனிருக்கிற, (பே-வ.) புதுப்பாணியிலுள்ள, நாகரிகப் பாங்கான.
knowingly
adv. முழு விழிப்புடனிருக்கிற நிலையில், வேண்டுமென்றே, நெஞ்சறிந்து, மனப்பூர்வமாக.
knowledge
n. அறிவு, அறிந்த செய்தி, தகவல், புற அறிவுத்தொகுதி, அறிவுப்பரப்பு, அறிவுப் பரப்பெல்லை, தெரிந்துள்ள செய்தியின் அளவு, நெருங்கிய பழக்கம், அனுபவப் பழக்க அறிவு.
knowledgeable
a. (பே-வ.) செய்திகளை நன்கு தெரிந்துள்ள, விவரமறிந்த, அறிவமைதியுடைய.
knuckle
n. கைமூட்டி, விரலடி இணை எலும்பு, நாற்கால் விலங்கு வகையில் கணைக்கால், குதிரைமுட்டு, கன்றுக் குட்டி அல்லது பன்றியின் இறைச்சியுடன் கூடிய முழங்கால் முட்டுப் பகுதி, (வினை.) கைமுட்டியால் அடி, கைமுட்டியால் தேய், சிரல் மல்க்கிக் குத்து, முட்டியால் அழுத்து, முட்டி கொண்டு துடை, கோலியாடுகையில் விரற் கணுக்களை நிலத்தின் மேல் வை.