English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hope
n. ஆர்வ நம்பிக்கை, அவா ஆர்வம், ஆர்வம், விருப்பம், வரவு காத்திருக்கை, நடக்கக் கூடியது, நம்பிக்கைக்கு இடந்தரக்கூடியது, நம்பிக்கையார்வம் கொள்வதற்கு ஏதுவாயிருப்பவர், ஆர்வ நம்பிக்கைக்கு ஏதுவாயிருக்கும் பொருள், அவா நம்பிக்கைக்குக் காரணமாயிருக்கும் செய்தி, (வி.) நம்பு, நம்பிக்கைக் கொள், அவா ஆர்வம் காட்டு, ஆவலுடன் எதிர் நோக்கு, நிறைவேறக் கூடுமென எண்ணு.
hopeful
n. முன்னுக்கு வரக்கூடுமென நம்பிக்கையளிக்கிற இளையோர், (பெ.) நம்பிக்கை கொண்டுள்ள, நம்பிக்கையூட்டுகிற, நம்பிக்கைக்கு இடங்கொடுக்கிற, நிறைவேறத்தக்க.
hopeless
a. நம்பிக்கை உணர்ச்சியற்ற, நம்பிக்கைக்கு இடந்தராத, நோய்வகையில் தீராத.
hoplite
n. நிரம்பப் படைக்கலங்கள் தாங்கிய பண்டைக் கிரேக்கக் காலாட் படைவீரன்.
hopped
a. தேறல்வகையில் முசுக்கட்டையினச் செடிவகையின் காய்களைக்கொண்டு கசப்புச்சுவை ஊட்டப்பெற்ற.
hopping
-1 n. தேறலுக்குக் கசப்புச்சுவையூட்டப் பயன்படுத்தப்படும் முசுக்கட்டையினச் செடியின் அறுவடைக் காலம்.
hopple
n. முட்டுக்கட்டை, குதிரை முதலிய விலங்குகளின் கால்களுக்கு இடப்படும் தளை, (வி.) தளையிடு, கால்களைக்கட்டு, முட்டுக்கட்டை இடு.
hoppy
a. முசுக்கட்டையினச் செடியின் கசப்புக் காய்களின் சுவையுள்ள.
hops
n. pl. மாவூறல் தேறல் முதலியவற்றிற்குக் கசப்புச் சுவை தருவதற்குப் பயன்படுத்தப்படும் முசுக்கட்டையினச் செடியின் கசப்புக்காய் வகை.
hopsack, hop-sack
முசுக்கட்டையினச் செடியின் கசப்புப் பழங்களைப் போட்டு வைப்பதற்கான பை.
hoptrefoil
n. மஞ்சள் நிற மணப்புல் வகை.
horal
a. மணிநேரம் சார்ந்த.
horary
a. மணிநேரத்துக்குரிய, ஒவ்வொரு மணி நேரத்திலும் நிகழ்கிற.
Horatian
a. ஹோரஸ் (கி.மு.65-க்ஷ்) என்ற லத்தீன் மொழிக் கவிஞரைச் சார்ந்த, ஹோரஸ் போன்ற, ஹோரஸின் கவிதை சார்ந்த, ஹோரஸின் கவிதை போன்ற.
horde
n. நாடோடி இனக் குழுவினர், கும்பல், திரள், கூட்டம், (வி.) கும்பலாகக் கூடி வாழ்.
horehound
n. இருமல் முதலியவைகளுக்குப் பயன்படுத்தப்படும் கசப்பும் மணமும் உள்ள சாறுடைய பூண்டு வகை.
horizon
n. அடிவானம், வான விளிம்பு, தொடுவான், காட்சி எல்லை, அறிவெல்லைக்கோடு, அனுபவ எல்லை, பற்றெல்லை, அக்கறை கொள்ளும் பொருள் தொகுதி எல்லை.
horizontal
n. கிடைக்கோடு, கிடைநிலை, கிடைநிலையிலுள்ள பொருள், (பெ.) அடிவானம் சார்ந்த, அடிவானத்திலுள்ள, அடிவானத்துக்கு ஒருபோகு ஆன, செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள, மட்டமான, படுமட்டமான, கிடையான, இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய.
hormone
n. (உட.) இயக்குநீர், குருதியில் கலந்து உறுப்புக்கள் செயற்படத் தூண்டும் உட்சுரப்பு நீர்வகைகளில் ஒன்று.
horn
n. விலங்குகளின் கொம்பு, காண்டாமிருக முதலியவற்றின் கோடு, கலைமான் கொம்பு, விலங்குகளின் தலையிலுள்ள கொம்பு போன்ற உறுப்பு, நத்தையின் கொடுங்கை, பூச்சியின் உணர்கொம்பு, ஆந்தை வகையின் சூட்டு, கொம்பில் பொதிந்துள்ள மூலப்பொருள், கொம்பினால் செய்யப்பட்ட சுண்ணக்கிண்ணம், துளைக்கருவி வகை, கொம்பினால் செய்யப்பட்ட குடிகலம், ஊதுகொம்பு, இசைக்கொம்பு, கொம்பு வடிவப் பொருள், முகடு, இளம்பிறையின் முனைகளில் ஒன்று, விரிகுடாவின் பிரிவு, ஆற்றின் கிளை, இருதலைத் தடுமாற்றத்தின் ஒரு கூறு, பொறி வண்டிகளில் எச்சரிக்கை ஒலி எழுப்புங்கருவி, வலிமையைக் குறிக்கும் யூதர்களின் சின்னம், (பெ.) கொம்பினால் செய்யப்பட்ட, (வி.) கொம்புகள் அமைத்து உதவு, கொம்புகளை நீக்கு, கொம்புகளினால் குத்து, தலையால் முட்டித்தள்ளு, கப்பல் அடிக்கட்டைக் கோட்டுக்குச் செங்கோணமாகக் கப்பற் சட்டத்தைச் சரிப்படுத்து, இசைக்கொம்பு ஊது, எச்சரிக்கை ஒலிக்கருவியை ஒலிக்கச்செய், நாடு கடத்து.