English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hooper
n. மிடாக்களுக்குப் பட்டை போடுபவர், கூடை முதலியன முடைபவர்.
hooping-cough
n. கக்குவான், குத்திருமல், நீண்ட கூக்குரலுடன் கூடிய குழந்தைத் தொற்றுநோய் இருமல் வகை.
hoopoe
n. பலவண்ணங்களும் பெரிய நிமிர்த்த சூட்டும் உடைய பறவை வகை.
Hoosier
n. அமெரிக்காவில் இந்தியானா அரசுப் பகுதியில் வாழ்பவரைக் குறிக்கும் அவல விளிப்பெயர்.
hoot
n. கூ கூவொலி, கொட்டகையில் இகழ்ச்சிக் கூச்சல், வெறுப்பொலி, ஆந்தை அலறல், கொம்பூதல் ஒலி, உந்து கலக் குழலோசை, சிறிதளவு, (வி.) கூ கூஒலி செய், இகழ்ச்சிக் கூச்சலிட்டுத் தாக்கு, வெறுப்பொலி எழுப்பித் துரத்து, ஆந்தை வகையில் அலறு, உந்துகலக் குழல் ஊது, எச்சரிக்கைச் சங்கு ஊது, ஊர்தியின் நீராவி விசைக்குழல் ஊது, விசைக்குழல் ஊதிக்கொண்டு செல்.
hooter
n. வெறுப்பொலி செய்பவர், தொழிற்சாலைச் சங்கு, நீராவி ஊதுகுழல்.
hoove
n. கால்நடைகளுக்குக் காணும் வயிறு உப்புதல் நோய் வகை.
Hoover
n. காற்றுநீக்கத் துப்புரவுக்கருவி வகை, (வி.) காற்று நீக்கத் துப்புரவுக் கருவியினால் துப்புரவு செய்.
hop
-1 n. தேறல் சுவையூட்டப் பயன்படுத்தப்படும் கசப்பான காய்களையுடைய தழுவிப்படரும் முசுக்கட்டையினச் செடியின் காய் வகையினால் கசப்புச் சுவையூட்டு, காய் வகையில் விளையச் செய், காய்வகை திரளப் பெறு.
hop-bitters
n. முசுக்கட்டையினச் செடிவகையின் கசப்புக் காய்களால் சுவையூட்டப்பெற்ற தேறல்வகை.
hop-fly
n. கசப்புக் காயினையுடைய முசுக்கட்டையினச் செடிவகைக்குத் தீங்கிழைக்கும் பச்சை ஈ வகை.
hop-garden
n. கசப்புக் காயினையுடைய முசுக்கட்டையினச் செடிவகை பயிரிடும் இடம்.
hop-o-my-thumb
n. குள்ளன்.
hop-pillow
n. தூக்கம் வருவிப்பதற்காக முசுக்கட்டையினச் செடிவகையின் பழங்கள் நிரப்பப் பெற்றுள்ள தலையணை.
hop-pocket
n. முசுக்கட்டையினச் செடிவகையின் பழங்களைப் போட்டு வைப்பதற்கான முரட்டுப் பை, முசுக்கட்டை இனச் செடிக்குரிய பழங்களில் ஏறத்தாழ 16க்ஷ் கல் எடை அளவு.
hop-pole
n. முசுக்கட்டையினச் செடிவகையின் தண்டினைத் தாங்கும் கழி.
hop-sacking
n. முசுக்கட்டையினக் கசப்புப்பூண்டு வகையின் பழங்களைப் போட்டு வைப்பதற்கான பை, முரட்டுச் சணல் துணி, சொரசொரப்பான மேற்புறமுடைய கம்பளித் துணி.
hop-scotch
n. சில்லு விளையாட்டு, நொண்டி விளையாட்டு.
hop-tree
n. முசுக்கட்டையினச் செடியின் பழங்களுக்குப் பதிலாகத் தேறற் சுவையூட்டப் பயன்படுத்தப்படும் கசப்புப் பழங்களைத் தரும் சிறு அமெரிக்க மரவகை.
hopbind, hopbine
கசப்புக்காயுடைய முசுக்கட்டை இனச் செடிவகை தழுவிப் படருவதற்குப் பயன்படுத்தும் தளிர்க்கிளை.