English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
honeyed
a. தேன் தடவிய, இனிப்பான, கவர்ச்சியுள்ள, புகழ்ந்து பசப்புகிற.
honeymoon
n. தேன்நிலவு, புது மணமக்கள் மகிழ்ச்சியோடு கழிக்கும் ஓய்வு நாட்கள், (வி.) தேன்நிலவுக் காலத்தைக் கழி.
honeysuckle
n. அழகிய மஞ்சள்நிற மலர்களையுடைய தழுவு கொடிவகை.
hong
n. சீனா நாட்டில் தொழிற்சாலை முதலியவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் கட்டிடங்களின் தொகுதி, சீனாவில் அல்லது ஜப்பானில் அயல்நாட்டு வாணிக நிறுவனம்.
honk
n. காட்டுவாத்தின் கூச்சல், உந்துவண்டியினது ஊதுகுழல் எழுப்பும் ஒலி, (வி.) காட்டுவாத்து வகையில் கூச்சலிடு, உந்துவண்டி ஊதுகுழல் ஒலிக்கச் செய்.
honorarium
n. மதிப்பூதியம், தொழிற்பணிகளுக்காக மனமுவந்து கொடுக்கப்படும் ஊதியம்.
honorary
n. ஊதியக்கட்டணம், (பெ.) மதிப்புக் காரணமாக வழங்கப்படுகிற, மதிப்பளிக்கிற, சிறப்பு வகையான, மதிப்புப்பட்டம் தாங்கிய, மதிப்பார்ந்த பணி வகிக்கிற, உழைப்பூதியமின்றிப் பணி செய்கிற, சட்டவலுவின்றிக் கண்ணியத்தின் பொறுப்பில் உள்ள.
honorific
n. மதிப்பு வழக்குச் சொல், (பெ.) நன் மதிப்புக் குறிப்பான.
honoriscausa
adv. (ல.) (தொ.) நன்மதிப்புக்கடையாளமாக.
honour
n. நன்மதிப்பு, புகழ், உயர் ஒழுக்க நெறி, பண்பொழுக்கம், நற்பெயர், நிறைவுடைமை, கன்னிமை, கற்பு நிலை, தன்மதிப்பு, தன்மானம், நுண்நேர்மையுணர்வு, உயர்பதவி, தலைமையிடம், சிறப்பு, சிறப்புரிமை, மதிப்புச்சின்னம், புகழ்ப்பட்டம், மதிப்புரிமை, தகுதி, தகுதிக்குரிய உயர்வு, மேன்மை, மேதகைமை, புகழ் தருபவர், மதிப்புத்தருவது, திருமேனி, உயர்வுவிளிக்குறிப்பு, குழிப் பந்தாட்டத்தில் முன்வெற்றி காரணமாக முந்து பந்தடி உரிமை, சீட்டாட்ட வகையில் சிறப்புச் சீட்டு வகை, வாணிகத்துறைப் பற்று மதிப்பு, ஒரே பெருமகனுக்குரிய மானியத்தொகுதி, (வி.) உயர்வாக மதி, பெருமைப்படுத்து, உயர்மதிப்புக் கொடு, அணி செய், அழகு செய், சிறப்பு அளி, சிறப்பி, சிறப்புச் செய், சிறப்புப்பட்டம் வழங்கு, மதிப்புச் சின்னம் அளி, வாணிகத் துறையில் கடன் பட்டியலை உரிய சமயம் ஏற்றுக்கொள், உரியசமயம் கடன்பட்டியலுக்குப் பணம் கொடு.
Honourable
n. கோமான் இளைய புதல்வர்களுக்கும் நடுத்தரப் பெருமக்களுக்கும் முறை மன்ற நீதிபதிகளுக்கும் தனிமன்ற நீதிபதிகளுக்கும் வழங்கப்பெறும் மதிப்படைச்சொல்.
honours
n. pl. வரிசை, சிறப்பு, பெருமை, விருந்தினர்களுக்குச் செய்யப்படும் மரியாதைகள், பல்கலைக் கழகங்கள் வகையில் தேர்வு வெற்றியின் தேவைக்கு மேற்பட்ட தனிச் சிறப்புத் தகுதி.
honours-man
n. தனிச் சிறப்பு வாய்ந்த பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவர்.
hood
n. பிடரிக் கவிகை, தலைக்கும் கழுத்துக்குமான முக்காடு, பல்கலைக் கழகங்கள் வகையில் இன்னபட்டம் என்பதைக் குறிப்பதற்காக அங்கியின்மேல் அணியப்படும் விருது, பருந்தின் தலைச்சூட்டு, வடிவத்தில் அல்லது பயன்படுத்துவதில் தலைச்சீராவைப் போன்ற பொருள், உந்து வண்டியின் முகப்பிலுள்ள மடிப்பு முகடு, வண்டி முகடு, மேற்கட்டி, பன்னாங்கு, பல்லக்கின் மேற்கவிகை, புகைப்போக்கி மூடி, நல்ல பாம்பின் படம், (வி.) தலைச்சீராவினால் மூடு, முக்காடிடு, மூடி மறை.
hood,man-blind
கண்ணாம்பூச்சி விளையாட்டு.
hoodie, hoodie-crow
n. தலைச் சூட்டுடைய காக்கை வகை.
hoodless
a. தலைச் சூட்டற்ற, மேற்கட்டியில்லாத, பாம்பு வகையில் படமில்லாத.
hoodman
n. கண்ணாம்பூச்சி விளையாட்டில் கண்கட்டி ஆடுபவர்.
hoodwick
v. ஏமாற்று, ஏய், வஞ்சி, மோசஞ் செய், கண்களைக் கட்டு.
hoof
n. குளம்பு, குளம்புடைய விலங்கு, (வி.) குளம்பினால் தாக்கு, உதை, வெளியேற்று, நட.