English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hachures
n. pl. (பிர.) தரைப்படங்களில் மலைச்சரிவுகளைக் காட்டுவதற்கான கோடுகள்.
hacienda
n. (ஸ்பா.) குடியிருப்பு மனையோடு கூடிய தோட்டம்.
hack
-1 n. மண்வெட்டி வகை, சுரங்கத் தொழிலரின் கடப்பாரை, ஆழமான வெட்டு, காயம், புதைமிதியடியின் பெரு விரற் பகுதியால் உதைக்கப்பட்டு விளையும் காயம், (வி.) வெட்டு, அடையாளம் ஏற்படும்படி வெட்டு கீறு, சம்மட்டியால் அடித்துச் சொரசொரப்பாக்கு, அடித்துக் காயப்படுத்து, காற்பந்தாட்டத்தில் எதிர்த்தரப்பு ஆட்டக்காரரின் கீழ்க்கால் முன்புறத்தின்மீது உதை, காயப்படும்படி அடி, சிறிது சிறிதாக வறட்டு இருமல் இருமு.
hack-log
n. இறைச்சி வெட்டும் மரக்கட்டை.
hack-saw
n. உலோகப் பொருளை வெட்டும் வாள், உலோக இரம்பம்.
hack-work
n. நுல் வெளியீட்டார்க்குச் செய்யும் இலக்கியக் கூலிவேலை.
hackle
n. சணலுக்கான எஃகுச் சீப்பு, சணலைத் துப்புரவு செய்யும் சீப்பு, கோழி முதலிய பறவைகளின் கழுத்திலுள்ள நீண்ட இறகுகள், சேவலின் கழுத்திறகு, (வி.) எஃகுச் சீப்பைக் கொண்டு சிக்கறு, சிக்கெடு.
hackly
a. வெட்டப்பட்டதைப் போன்று சொரசொரப்புடைய, (கனி.) தாறுமாறும் கரடுமுரடும் ஆன.
hackmatack
n. அமெரிக்க சவுக்கு மரவகை, அமெரிக்க ஊசியிலை மரவகை.
hackney
n. சவாரிக்குதிரை, கடும்வேலை செய்பவன், கூலிக்கு உழைப்பவன், (பெ.) வாடகைக்கு விடப்பட்ட, (வி.) பொதுவாக்கு, பழகியதாக்கு, சிறுதிறமாக்கு.
hackney-carriage, hackney-coach
n. வாடகை வண்டி.
hackneyed
a. பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற, பொதுப்பயனுக்கான, பழகிப்போன, சிறுதிறமான, அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால் சலித்துப்போன.
hackneyman
n. வாடகைக் குதிரைக்காரன், சவாரிக் குதிரைகள் வைத்திருப்பவன்.
hackstand
n. வாடகை வண்டி நிறுத்துமிடம்.
hackwriter
n. கூலி எழுத்தர்.
had, v. have
என்பதன் இறந்தகாலம்.
haddock
n. 'ஆடாக்' மீன், 'காட்' இனத்தைச் சேர்ந்த கடல்மீன்வகை.
hade
v. (மண்., சுரங்.) செங்குத்தான நிலையிலிருந்து சாய்ந்திரு.
Hades
v. கிரேக்க புராண வழக்கில் கீழுலகம், பாதாளம், ஆவி உலகம், நரகம்.