English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
horngeld
n. (வர.) கால்நடைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அறுதி செய்யப்படும் நிலமானியப் பணி.
horning
n. பிறைநிலாத் தோற்றம்.
hornish
a. கொம்புபோன்ற, கெட்டியான.
hornist
a. இசைக்கொம்பு ஊதுபவர்.
hornless
a. கொம்புகள் அற்ற.
hornpipe
n. வழக்கற்றுப்போன துளைக்கருவி வகை, கப்பலோட்டிகளிடையே தனி மனிதரின் எழுச்சிமிக்க ஆங்கில ஆடல்வகை, கப்பலோட்டிகளிடையே தனி மனிதரின் ஆடலுக்குரிய இசை மெட்டமைப்பு.
hornstone
n. மணல் சத்து நிறைந்துள்ள எளிதில் நொறுங்கத்தக்க பாறைவகை.
horntail
n. பளிங்கனைய நான்கு சிறகுகளையுடைய பூச்சி வகை.
hornwork
n. கோட்டைக் கொத்தள வகையில் திரையமைப்பால் இணைக்கப்பட்ட இரண்டு காவலரண்களைக் கொண்ட புற அரண், கொம்பில் செய்யப்படும் வேலை.
horny
a. கொம்புக்குரிய, கொம்பு போன்ற, கொம்புகள் மலிந்த, கொம்பினைப்போல் கெட்டியான, உணர்ச்சியற்ற, மரத்துப்போன.
horny-handed
a. உழைத்துக் காழ்ப்பேறிய கைகளை உடைய.
horologe
n. மணிப்பொறி, கடிகாரம், காலங் காட்டும் பொறி அமைப்பு.
horologer, horlogist
மணிப்பொறி செய்பவர்.
horology
n. காலமளப்பது பற்றிய ஆய்வுத்துறை, மணிப் பொறி செய்யும் கலை.
horopter
n. கண்களின் குறிப்பிட்ட நிலையில் ஒன்றே ஒன்று ஆகக் காணப்படும் புள்ளிகளின் கூட்டுத்தொகுதி.
horoscope
n. பிறப்புக்குறிப்பு, சாதகம், நேர வானிலைப்பட்டி.
horoscopy
n. சாதபலக் கணிப்பு, சாதகத்தைக்கொண்டு ஒருவரது வாழ்க்கையின் வரும்பொருளுரைக்குங் கலை, பிறக்கும் நேரத்தில் கோள்களின் நிலை.
horrent
a. (செய்.) சிலிர்த்துக் கொண்டிருக்கிற, அடர்த்தியாக நிறைந்துள்ள.