English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hauler
n. இழுவைப்பணியாள்.
haulier
n. இழுவைப்பணியாள், நிலக்கரிச் சுரங்கவழியின் அடிப்பாகத்துக்குத் தொட்டிகளை இழுத்துச் செல்பவர், கூலிக்கு வண்டியிழுப்பவர்.
haull-down
adv. கப்பலின் உடற்பகுதி அடிவானத்திற்குக் கீழ்ப்புறமாகும் படி மிகத் தொலைவில் உள்ள நிலையில்.
haulm
n. அடித்தண்டு, பயறு வகைகளின் தாள், உருளைக் கிழங்கின் அடித்தண்டு.
haunch
n. இடுப்பு, கடைசி விலா எலும்புகளுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட உடற்பகுதி, பிட்டத்துடன் கூடிய இடுப்பு, மான் முதலிய விலங்குகளின் கால் துடை இறைச்சி, (க-க.) வளைவு மாடத்தின் உட்பக்கச் சரிவு, கீழ்நோக்கிய கையின் எறிவு, (வி.) கையைக் கீழே தாழ்த்தி வீசி எறி.
haunt
n. பயிலிடம், ஊடாட்டப்பகுதி, நடமாட்டப்பகுதி, விலங்குகள் வழக்கமாகச் சென்று தீனி கொள்ளும் இடம், குற்றவாளிகள் பதுங்கிடம், (வி.) அடிக்கடி செல், சென்று ஊடாடு, வழக்கமாக நடமாடு, பயில், பழகி ஊடாடு, விரும்பிக் கலந்து உறவாடு, வழக்கமாகத் தங்கியிரு, ஓயாது வந்து தலையிடு, சுற்றிச்சுற்றி வா, பேய்வகையில் தங்கியிரு, வட்டமிடு, எண்ணங்கள் வகையில் அடிக்கடி வந்து தோன்று, ஓயாது நினைவில் ஊடாடு.
haunted
a. பேய் தங்கிவாழ்கிற, பேய்கள் வட்டமிடுகிற, பேயாட்டம் நிரம்பிய.
haut goat
n. (பிர.) உச்ச உயர் சுவைநலம், சிறு கறை.
hautboy
n. நாகசுரம் போன்ற துளை இசைக்கருவி வகை, துளை இசைக்கருவி வகையின் அழுத்து கட்டை, உயரமான பழச்செடி வகை.
haute ecole
n. (பிர.) மிகக் கடினமான குதிரை ஏற்ற வித்தைகள்.
hauteur
n. (பிர.) செருக்கார்ந்த நடத்தை, அகம்பாவம்.
Havana
n. கியூபா என்னும் தீவில் செய்யப்படும் சுருட்டு வகை.
have
n. கொள், கொண்டிரு, பெறு, பெற்றிரு, முயன்று பெறு, வைத்திரு, உடைமையாகக் கொண்டிரு, உரிமையாகப் பெற்றிரு, வசமாகக் கொள், கைக்கொண்டிரு, உறவாகக் கொள், பண்பாகக் கொள், படு, தாங்கு, பொறுத்துக்கொள், அனுபவி, நுகர்பொருளாகக் கொள், பட்டறி, உணர், நுகர், அறி, உளங்கொள், பொருள் காண், புரிந்து கொள், தகவல் பெறு, கருது, வெளியிடு, கூறு, வலியுறுத்தி, மதி, கொண்டு வா, கொண்டு செல், போகச் செய், ஏற்றுக்கொள், பிறப்பி, ஈனு, இன்றியமையா நிலைபெறு, கடமைப்பட்டிரு, மேனிலை பெறு, விஞ்சிய நிலை அடை, சிக்க வை, ஏமாற்று, முடித்து விடு.
have the advantage of.
இயல்பான மேல்நலம் பெற்றிரு.
have the ball at ones feet
வெற்றிக்கு வழிகாண்.
haven
n. துறைமுகம், புகலிடம், ஏமம்.
haversack
n. படைவீரரின் உணவுப்பை.
havildar
n. படைத்துறை மேலாள்.
having
n. உடையவராயிருத்தல், உடைமை, சொத்து.