English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hay-box
n. பதனுணுப்பெட்டி, அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவை வைத்து முற்றிலும் பக்குவமடையச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் உலர்புல்லடைத்த காற்றுப்புகாப் பெட்டி.
hay-cock
n. உலர்புல் குவியல், வைக்கோற் போர்.
hay-fever
n. தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக் காய்ச்சல் வகை.
hay-field
n. உலர்புற்களம், புல் உலர்த்துபுலம்.
hay-fork
n. உலர்புல் கவர்க்கோல், உலர்புல்லைப் புரட்டப் பயன்படும் நீண்ட பிடியுடைய கவர்முட்கருவி.
hay-maker
n. புல் உலர்த்துபவர், அறுத்த புல்லைக் கிளறிப்பரப்பியக் காய வைப்பவர், புல் கிளறி உலர்த்துவதற்கான கருவி.
hay-rick
n. உலர்புற் கட்டு, உலர்புற் போர்.
hay-ward
n. வேலிகாவலர், ஊர் வட்டத்தினுள் கால்நடைகள் நுழைந்து பாழாக்காதபடி வேலிகளையும் அடைப்புக்களையும் கண்காணிக்கும் பொறுப்பாளர்.
hay-wire
n. உலர்புல்லைப் பிணைத்துக்கட்டும் கம்பி, (பெ.) கோட்டியான, பெருங்குழப்பமான, தாறுமாறான.
haying
n. உலர்புல் அறுவடை, புல் உலர்த்தல்.
hayloft
n. வைக்கோற்பரண், வைக்கோல் வைப்பதற்கான மேலிடம்.
haymow
n. உலர்புற்கட்டு, உலர்புற்கந்து, களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உலர்புல்.
hayseed
n. உலர்புல்லினின்று உதிரும் புல்விதைகள்.
haysel
n. உலர்புற் பருவம், உலர்புல் விளைவிக்கும் காலம்.
hazard
n. சொக்கட்டானில் சிக்கலான குருட்டடி ஆட்ட வகை, குருட்டடி, இடர்துணி முயற்சி, துணிந்த செய்தி, இடையூறு, தீங்கு, (வி.) இடர்க்கு உட்படுத்து, இடர் துணிந்திறங்கு, துணிந்து மேற்கொள்ளு, குருட்டடியான ஊகம் செய், குருட்டடி ஊகமாக உரை.
hazardous
a. துணிச்சலான, இடரார்ந்த, அபாயமான.
haze
n. ஆவிமூடாக்கு, வெப்பத்தினால் அடிக்கடி நிலவுலகடுத்து வளிமண்டத்தில் ஏற்படும் மங்கல் நிலை, பனியார்ந்த நிலை, தௌிவின்மை, மனக்குழப்பம், (வி.) மங்கலாக்கு, மனக்குழப்பம் உண்டாக்கு.
hazel
n. கொட்டையுடைய தொய்வொசிவான தண்டு கிளையுடைய குறுமரவகை, குறுமர வகையின் கொட்டை நிறம், கண்களின் மங்கலான செம்மை கலந்த பழுப்பு நிறம்.
hazel-nut
n. குறுமர வகையின் உணவாகக் கொள்ளத்தக்க செம்பழுப்பு நிறக் கொட்டை.
hazy
a. மங்கலான, பனியார்ந்த, தௌிவற்ற, ஐயத்துக்கிடமான, சிறிது குடிமயக்கமுள்ள.