English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
head-wind
n. எதிர்க்காற்று.
headache
n. தலைவலி, மண்டையிடி, (பே-வ.) பெருந்தொல்லைக்கு இடமான செய்தி.
headachy
a. தலைவலியால் துன்பப்படுகிற, தலைவலி உண்டுபண்ணுகிற.
headborough
n. (வர.) சிறு காவலர், காவல்துறைப்பணியாள்.
headed
a. தலையுள்ள, தலைவருள்ள, முதல்வராகக் கொண்ட.
header
n. நடத்திச் செல்பவர், வழிகாட்டி, தலைகீழாக நீரில் மூழ்குதல், சுவரின் முன்பகுதிக்குச் செங்கோணத்தில் பொருத்தப்பட்ட கல் அல்லது செங்கல், தலையிடிக்கும் அடி, தலை கொடுத்தடிக்கும் உதைபந்து, மிடாக்களுக்கு மூடி செய்து பொருத்துபவர்.
headgear
n. தலையணி, குல்லாய், தொப்பி.
headiness
n. மடத்துணிச்சல், அடங்காத துடுக்குத்தனம், மட்டற்ற வெறியூட்டுந் திறம்.
heading
n. காற்பந்தாட்ட வகையில் பந்தினைத் தலையால் மோதுதல், தலைப்பு, பக்கத்தலைப்பு, தலையரங்கம், சுரங்கப் பாதை அல்லது குடைந்து பாதை அமைப்பதற்காக போடப்படும் முதல் தளமட்டப் பாதை, முன்செல்லுதல், முன்னேறுதல்.
headland
n. கடலில் புகுந்துள்ள மேட்டுநிலப் பகுதி, நிலக்கூம்பு, வயலின் ஒரு மூலையில் உழுது பயன்படுத்தாது விடப்பட்ட பகுதி.
headlight
n. முன்விளக்கு, உந்துவண்டி கப்பல் விமானத்தில் ஆகியவற்றின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள வெளிச்சம் மிக்க விளக்கு.
headline
n. பத்திரிக்கைத் தலைப்பு, வானொலியில் முதலிற்கூறப்படும் செய்திச் சுருக்கம்.
headlong
a. தலைகுப்புறப் பாய்கிற, தலைகீழான, துணிகரமான, கண்மூடித்தனமான, பதற்றமான, விரைவுடைய, (வினையடை) தலைகீழாக, பதற்றமாக, மிகுவிரைவாக, முன்யோசனையற்று.
headmark
n. தனிப்பட்ட தன்மை.
headmaster
n. பள்ளித்தலைவர், தலைமையாசிரியர்.
headmistress
n. பள்ளித்தலைவி, தலைமை ஆசிரியை.
headphone
n. தலைமேல் அணியப்படும் தொலைபேசிக் கருவியிலுள்ள 'குரல் வாங்கி'.
headpiece
n. தலைச்சீரா, இருப்புத்தொப்பி, தொப்பி, குல்லாய், தலைப்பகுதி, மண்டை ஓடு, மூளை, அறிவாற்றல் உடையவர், உச்சிப்பகுதி, அச்சுத்துறையில் நுலின் அல்லது அதிகாரத்தின் தலைப்பில் அழகுக்குரிய செதுக்கு ஒப்பனைப்பகுதி.
headquarters
n. தலைமை அலுவலகம், செயற்கள மையம், தளபதி அலுவலகம்.