English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hatching
n. நேர்த்தியான கோடுகள் மூலம் நிழல் வண்ணங்காட்டுதல்.
hatchment
n. (கட்.) மரபுச்சின்னங்களைத் தாங்கிய கேடயம், இறந்தவருடைய படைக்கலங்களைக் குறித்த வீட்டு முகப்புத்தகடு.
hatchway
n. (கப்.) தளப்புழைவாய், சரக்குகளை இறக்குவதற்காகக் கப்பல் தளத்திலுள்ள புழை, நிலத்தளத்திலுள்ள புகுவாயில், சுவரிலுள்ள திட்டிவாயில், மோட்டிலுள்ள புழைவாய்.
hate
n. வெறுப்பு, பகைமை, (வி.) பெருவெறுப்புக்கொள், அருவரு, கறவு.
hateful
a. வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகிற, அருவருப்பான, வெறுக்கத்தக்க, வெறுப்புக்கொண்டிருக்கிற, வெறுப்பைக் காட்டிக்கொள்ளுகிற.
hatful
n. தொப்பி கொள்ளக்கூடிய அளவு.
hath, have
v. என்பதன் பழையவழக்கு நிகழ்காலப் படர்க்கை ஒருமை வடிவம்.
hatpin
n. தொப்பியை மயிரோடு இணைப்பதற்கான நீண்ட ஊசி.
hatrack
n. தொப்பி மாட்டும் சட்டம்.
hatred
n. பெருவெறுப்பு, பகைமை, வன்மம், காழ்ப்பு.
hatstand
n. தொப்பி மாட்டுவதற்கான முளைகளுடன் கூடிய நிலைச்சட்டம்.
hatted
a. தொப்பியணிந்துள்ள, தொப்பியினால் மூடப்பட்ட.
hatter
n. தொப்பி செய்பவர், தொப்பி விற்பனையாளர்.
hatti, hattisherif
n. (பெர்.) (வர.) துருக்கி சுல்தானால் கையெழுத்திடப்பட்ட நிலவரக் கட்டளை.
hauberk
n. போர்கவசம், இருப்புக் கவசம்.
haugh
n. ஆற்றங்கரை வண்டல்நிலச் சமவெளி.
haughtiness
n. தருக்கு, இறுமாப்பு, மேட்டிமை.
haughty
a. செருக்கு வாய்ந்த, ஏளன இறுமாப்புக்கொண்ட, மேட்டிமையுடன் அவமதித்து நடக்கிற.
haul
n. இழுப்பு, இழுவை, ஓர் இழுவை வலைப்பட்ட மீன், ஆதாயத்தின் அளவு, பேறு, இழுக்கப்பட்ட சுமை, (வி.) இழு, வலித்திழு, வெட்டியிழு, வண்டி முதலியவற்றில் எடுத்துச் செல், கப்பலின் போக்கினைமாற்று, காற்று வகையில் திசைமாறு.
haulage
n. இழுப்பு, இழுவைக் கூலி, பளுவேறிய சரக்கின் இடமாற்றம்.