English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hart
n. கலைமான், செந்நிற மான் கலை, ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஆண்மான்.
hartal
n. (இ.) கடையடைப்பு, அரசியல் எதிர்ப்புக்கு அடையாளமான கண்டன வேலைநிறுத்தமுறை.
hartbeest, hartebeest
n. தென் ஆப்பிரிக்க மான்வகை.
harts-tongue
n. தோல்வார் வடிவமுள்ள இலைகளையுடைய சூரல்வகை.
hartshorn
n. கலைமான் கொம்பு, கலைமான் கொம்புக் கரைசல், நவச்சாரக் கரைசல்.
harum-scarum
n. மடத்துணிச்சல் உள்ளவர், மடத்துணிச்சல் உள்ள நடத்தை, (பெ.) மடத்துணிச்சலுள்ள.
harvest
n. கதிரறுப்பு, அறுவடை, அறுவடைப்பருவம், கூலப்பயிர், பருவ விளைவு, உழைப்பின் பயன், நல்விளைவு, பெரு வருவாய், (வி.) கதிரறுத்துக்குவி, அறுவடைசெய், சேர்த்துவை.
harvest-bug
n. கதிரறுப்புக் காலத்தில் தொந்தரவு கொடுக்கும் சிறு பூச்சி வகை.
harvest-lady, harvest-lord
n. அறுவடை செய்பவர்களில் முதன்மையானவர்கள்.
harvest-queen
n. அறுவடை செய்யப்பட்ட கூலப்பயிரின் கடைசி இணுக்கினால் செய்யப்பட்ட பொம்மை உருவம், அறுவடைக்காரர்களில் முதன்மையானவர்.
harvester
n. கதிரறுப்பவர், கதிரறுக்கும் இயந்திரம், கதிரறுப்புக் காலத்தில் தொந்தரவு கொடுக்கும் சிறு பூச்சி வகை.
harvestman
n. கதிரறுப்பு வேலையில் ஈடுபட்டிருப்பவர்.
has-been
n. (பே-வ.) முன்பிருந்த திறல் இழந்தவர், முன்திறம் இழந்தது, பழமையாகிவிட்ட பொருள்.
has, v. have
என்பதன் படர்க்கை ஒருமை வடிவம்.
hash
n. கொத்திய இறைச்சிக்கறி, புதிய உருவில் படைக்கப்பட்ட பழஞ்செய்தி, கதம்ப கூளம், (வி.) கொத்து, கொந்து, இறைச்சியினைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டு.
hasheesh, hashish
கசகசா வகை, சணல் வகைச்செடி, கஞ்சா, அரபியா-எகிப்து-துருக்கி முதலிய நாடுகளில் புகைப்பதற்கு அல்லது மெல்லுவதற்கென உலர்த்தப்படுகிற சணல் செடியின் கொழுந்துகளும் இளம் பகுதிகளும் அடங்கிய சரக்கு.
haslet
n. வறுத்து உணவாகக் கொள்ளத்தக்க பன்றிக்குடல்.
hasp
n. கொளுவி, கொண்டி, பூட்டு, கொக்கி, நுற்கும் கதிர், நுற்கண்டு, நுற்கழி, நுற்சிட்டம், (வி.) கொளுவி மாட்டிப்பூட்டு.
hassock
n. முழந்தாளிட்டு நிற்பதற்கான திண்டு, புற்கற்றை, மென்சுணக்கல் வகை.
hast, v. have
என்பதன் பழங்கால முன்னிலை ஒருமை வடிவம்.