English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
harp-seal
n. கிரீன்லாந்து மாநிலத்திலுள்ள யாழ்போன்ற வளைவுடைய கடல்நாய் வகை.
harp-shell
n. வில்யாழின் நரம்புகளைப் போன்ற விலாப்புறமுடைய சிப்பிவகை.
harper
n. நரப்பிசைக் கருவிவகை வாசிப்பவர்.
harpings
n. pl. கப்பல் முன்புற வரிப்பலகைகளின் முகப்புப் பகுதிகள்.
harpoon
n. மண்டா, திமிங்கிலத்திள் முதலியவற்றைப் பிடிப்பதற்காகக் கயிறு கட்டியுள்ள ஈட்டிபோன்ற எறிபடை, (வி.) மண்டாவினாற் குத்து.
harpoon-gun
n. மண்டா எறிவதற்கான துப்பாக்கி.
harpsichord
n. தந்திகள் இறகினால் அல்லது தோல் ஊசிகளால் வருடப்படும் ஆணிப்பட்டையுள்ள முற்கால இசைக்கருவி வகை.
harpy
n. கிரேக்க புராணக் கதையில் பறவையின் சிறகுகளும் நகங்களும் உடைய கோரப் பெண்ணுருவ அரக்கியருள் ஒருத்தி, கொடுங்கொள்ளையிடுபவர், சூறையாடி, பெரிய தென் அமெரிக்க கழுகு வகை.
harpy-eagle
n. பெரிய தென் அமெரிக்க கழுகு வகை.
harquebus
n. பழைய மாதிரியான துப்பாக்கி வகை.
harridan
n. சிடுசிடுப்புவாய்ந்த கிழவி, ஓயாது பூசலிடுங் கிழவி.
harrier
-1 n. பாழாக்குபவர், கொள்ளைக்காரர், தொல்லை தருபவர்.
harriers
n. pl. முயல்வேட்டை நாய்களின் கும்பு, முயல் வேட்டைக் கழகப் பெயர்.
Harris tweed
n. ஹெப்ரைடிஸ் தீவுகளில் செய்யப்படும் கம்பளி ஆடை வகை.
Harrovian
n. இங்கிலாந்திலுள்ள ஹாரோ உயர்பள்ளியில் படித்தவர், ஹாரோ வட்டாரத்தில் வாழ்பவர், (பெ.) ஹாரோ உயர்பள்ளிக்குரிய, ஹாரோ வட்டாரம் சார்ந்த.
harrow
n. பரம்பு, பலுகுக்கட்டை, வயலில் மண்கட்டிகளை உடைத்துப் பரப்பாக்குவதற்கான பல கொழுத்தட்டு, (வி.) பரம்படி, வயலில் மண்கட்டியுடை, கீறு, புண்படுத்து, மனவருத்தமுண்டாக்கு.
harrowing
a. பெரு மனவேதனை தருகிற.
harry
n. பாழாக்கு, கொள்ளைடு, சூறையாடு, பறி, தொல்லைப்படுத்து, வதை.
harsh
a. கரடுமுரடான, கடுப்பான, உறுத்தலான, முருடான, இன்னாத, இனிமையற்ற, கடுப்பூட்டுகிற,வெறுப்பான, உவர்ப்பூட்டுகிற, காதுக்கு அருவருப்பான, கேட்கப் பொறுக்காத, இன்னா ஓசையுடைய, கண்ணுக்கு உறுத்தலான, விரும்பாச் சுவையுடைய, முரண்சுவையுடைய, முரண்பட்ட, இசைவற்ற, கனிவற்ற, கடுகடுத்த, மட்டுமீறிய கண்டிப்பு வாய்ந்த, கடுமையான, கடுமை காட்டுகிற, கடுமையாகச் செயலாற்றுகிற.