English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hard
n. கரையோரச் சரிவுச்சாலை, கடினம், கெட்டியான நிலம், உறுதியான கடற்கரை, கடின உழைப்பு, (பெ.) உறுதியான, தொட்டால் நெகிழாத, கெட்டியான, கண்டிப்பான, எளிதாயிராத, உணர்ச்சியற்ற, கொடிய, தகுதிக்கு மிஞ்சிய துன்பம் விளைக்கிற, நேர்மையின்றி இன்னல் பயக்கிற, கஞ்சத்தனமுள்ள, பொறுக்கமுடியாத, முரணிய, கண்ணுக்கோ செவிக்கோ இன்பம் பயவாத, தேறல் வகையில் வெறியூட்டுகிற, சாராயங் கலந்துள்ள, விலைவாசிகள் வகையில் அகவிலையான, எட்டாத, (ஒலி.) வல்லோசையுள்ள, பெருமுயற்சி செய்ய வேண்டியுள்ள, உழைத்துத் துன்பப்படுகிற, நீர்வகையில் உப்பு வகைகள் கலந்திருப்பதால் நுரைவிடாத, செய்திகள் வகையில் திட்டவட்டமான, ஆதாரமுள்ள, (வினையடை) மிக உழைத்து, விடாமுயற்சியுடன், கடுமையாக, மிகுதியாக, காலஇடச்சூழ்நிலை வகையில் சிறிதுகூட அனுகூலமாயிராமல், முழு அளவுக்கு.
hard-a-lee
adv. காற்றிற்கு மறைவான பகுதிக்கருகில்.
hard-bake
n. வாதுமைப் பண்ணிய வகை.
hard-baked
a. அப்பம் முதலியவை வகையில் கெட்டியாகிற வரையில் சுடப்பட்ட.
hard-billed
a. கெட்டியான அலகுடைய.
hard-bitten
a. மூர்க்கமாகச் சண்டையிடுகிற.
hard-cured
a. மீனைப்போல் உப்பிட்டு வெயிலில் நன்றாக உலர்த்தப்பட்ட.
hard-drawn
a. உலோகக் கம்பி முதலியவை வகையில் வேண்டிய திண்மை பெறும் பொருட்டுக் குளிர்ந்திருக்கும் போதே இழுக்கப்பட்ட.
hard-earned
a. வருந்தி ஈட்டிய.
hard-favoured, hard-featured
a. அருவருப்பான முகத்தோற்றமுடைய.
hard-fisted
a. உறுதியான அல்லது வலிய முட்டிகள் அல்லது கைகளை உடைய, மூடிய முட்டியுடைய, கஞ்சத்தனமான.
hard-fought
a. தீவிரமாகப் போட்டியிடப்பட்ட.
hard-got, hard-gotten
a. வருந்தி ஈட்டிய, பாடுபட்டுப்பெற்ற.
hard-grained
a. நெருக்கமும் உறுதியும் வாய்ந்த நுண்மணி அமைப்புள்ள, கவர்ச்சியற்ற, அச்சந்தருந் தோற்றமுடைய.
hard-handed
a. உறுதியான கைகளையுடைய, மட்டு மதிப்பற்ற, திருத்தமற்ற, கடுமையான.
hard-headed
a. கூரிய அறிவுள்ள, காரியத்தில் கண்ணாயிருக்கிற, உணர்ச்சி வசப்படாத.
hard-hearted
a. உணர்ச்சியற்ற, வன்னெஞ்சுடைய, இரக்கமற்ற.
hard-laid
a. கயிறு-துணி முதலியவை வகையில் இறுக்க மாக முறுக்கப்பட்ட அல்லது நெய்யப்பட்ட.
hard-mouthed
a. கடிவாளத்தினால் எளிதிற் கட்டுப்படுத்த முடியாத, எளிதில் மேலாண்மை செய்ய இயலாத.
hard-pan
n. மேலீடான மண்ணுக்கு அடிப்படையாயுள்ள கெட்டியான நிலப்படலம், மிகக்கீழான மட்டம்.