English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fly-past
n. பறந்து செல்லும்போது குறிப்பிட்ட ஆள் அல்லது இடங்கடந்து செய்யப்படும் வணக்கமுறை.
flybane
n. ஈக்களை அழிக்கும் நஞ்சு, ஈக்களை அழிக்கும் நஞ்சாகப் பயன்படும் செடி வகை.
flyblow
n. இறைச்சி முதலியவற்றில் இடப்படும் ஈயின் முட்டை, (வினை) ஈ வகையில் இறைச்சியில் எச்சமிடு, இறைச்சியைக் கறைப்படுத்து.
flyblown
a. ஈயின் எச்சத்தினால் கறைப்படுத்தப்பட்ட, கெடுக்கப்பட்ட.
flybook
n. தூண்டிலிரை ஈக்களை வைத்திருப்பதற்கான சுவடி போன்ற பெட்டி.
flycatcher
n. பறக்கும் போதே ஈக்களைப் பிடித்துத்தின்னும் பறவை வகை.
flyer
n. பறப்பது, பறவை, மிக விரைந்துசெல்லும் விலங்கு, மிகுவிரை ஊர்தி, வானுதிமூலம் பறந்து செல்பவர், விசைவேகமுடைய இயந்திரப் பகுதி, படிக்கட்டின் நாற்கட்டான ஒருபிடி.
flying
a. பறந்துகொண்டிருக்கின்றன, பறப்பதுபோல இயங்குகின்ற, தொங்கலான, காற்றில் படபடத்து ஆடுகின்ற, இடங்கடந்து செல்லும்போதே ஆற்றப்படுகிற, அவசரமான, கடந்துசெல்லும் போது இடையே சிறிதளவு காலத்துக்குட்பட்ட, தற்போதைக்கு உதவுகிற, விரைவியங்க்கங் கருதி அமைக்கப்பட்ட.
flying-dog
n. குருதி உறிஞ்சும் வெளவால் வகை.
foal
n. குதிரைக்குட்டி, கழுதைக்குட்டி, (வினை) குட்டியிடு, ஈனு.
foam
n. நுரை, பொங்கு குமிழ்த்திரள், நீர்மத்தில் தேங்கிக்கிடக்கும் வளி ஆவிக்குமிழ், வாய்நுரை, மதுவின் நொதி, வியர்வை ஆவிநுரை, கடல் நுரை, (செய்.) கடல், (வினை) நுரைக்கச்செய், நுரைபொங்கு, நுரையால் நிரப்புவி, நுரைநுரையாகப் பொங்கு, வாயில் நுரைதள்ளு, அலைநீர்மோதி நுரைத்தெழு, நுரைக்கும் மது நிரம்பப்பெறு.
Foam pillow
நுரையணை, நுரைத் தலையணை
foamy
a. நுரை படிந்த, நுரைத்த, நுரையுள்ள.
fob
-1 n. சட்டையிலுள்ள கடிகாரப்பை, இடுப்பருகில் உள்ள உட்பை, சட்டைக் கடிகாரச்சங்கிலி, (வினை) கடிகாரப்பையில் வை, உட்பையில் இடு.
focal
a. குவிமையத்தைச் சார்ந்த, குவிமையத்திலுள்ள, குவிமையத்திள் கூடுகிற, ஒளிக்கதிர்கள் குவிந்து ஒரு மையத்திற் கூடுகிற.
focal-plane
n. குவிமையத்துக்குரிய தளம்.
focalize
v. குவமையத்திற் சென்றிணையும் படி செய், ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்து.
focks
n. pl. சுவர்த்தாளுக்கான கம்பளித் துணிச்சிதைவுகள், (வேதி.) பொருளின் தளர்த்தியான இலேசுப் படிகத்திரள்.
focus
n. குவிமையம், ஒளிமுகப்பு, கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு, தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம், ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம், நோயின் மூல இருப்பிடம், நோயின் முனைப்பிடம், (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி, (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம், (வினை) கதிர் குவியச்செய், கதிர் குவி, கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய், குவிமையயத்துக்கியையச் சரியாயமை, குவிமையம் படும்படி கொண்டியக்கு.
focusing
a. குவிமையப்படுத்த உதவுகிற.