English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fluid
n. நெகிழ்ச்சிப்பொருள், நெய், ஒழுகியற பொருள், வளி-நீர் போன்ற எளிதான புடை பெயர்ச்சியுடைய பொருள், கசிவுநீர், ஊறல்நீர், (பெ.) ஒழுகியல்புடைய, நெகிழ்வுடைய, கெட்டிமையற்ற, நிலையுறுதியற்ற, எளிதில் மாறுபடுகிற, கசிவான, மசிவான.
fluke
-1 n. தட்டைமீன் வகை, ஆட்டு ஈரலிற் காணப்படும் ஒட்டுண்ணிப் புழு வகை, உருளைக்கிழங்கு வகை.
flukes
n. pl. திமிங்கில வால்.
flume
n. தொழிலின் பொருட்டு நிழ் கொண்டு செல்வதற்காண செயற்கை நீர்க்கால், சிற்றாறு பாயும் குறுகிய மலையிடுக்கு, (வினை) செயற்கை நீர்க்கால்கள் ஏற்படுத்து, செயற்கை நீர்க்கால் வழியே கடத்திச் செல்.
flummery
n. கூலவகை அரைத்துச் செய்யப்படும் கூழ்ப்பண்ட வகை, மாவு-பால்-முட்டை முதலியவற்றைக்கொண்டு செய்யப்படும் இனிப்பு உணவு வகை, முகமன், வீண்புகழ்ச்சி, வம்புரை, பிதற்றல்.
flump
n. தொப்பென்ற ஒலி, தொப்பென்று விழுதல், தொப்பென்று விழும்படி எறியும் வீச்சு, (வினை) தொப்பென்று சென்று விழு, பெரும்பளுவுடன் இயங்கு, தொப்பென்று விழும்படி எறி.
flung, v. fling
என்பதன் இறந்தகாலம்.
flunkey
n. உடுப்பணிந்த சேவகன், காலாள், இச்சகம் பேசுபவன், அற்பன், பசப்பன்.
fluor
n. எளிதில் உருகி மசியும் மணிக்கல் போன்ற கனிப்பொருள் வகை.
fluor-spar
n. இங்கிலாந்து நாட்டில் டெர்பிஷைர் மாவட்டத்தில் எடுக்கப்படும் கனிப்பொருள் வகையின் பல்வண்ண ஒளிகாலும் மணியுருப்படிகம்.
fluoresce
v. வண்ண ஒளிகாலு, பன்னிறப் பகட்டொளி வெட்டு.
Fluorescence
ஒளி வண்ணம், ஒளிர் வண்ணம்
fluorescense
n. இருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் பல்வண்ண ஒளிகாலும் பண்பு, காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வெளியிடும் இயல்பு.
fluorescent
a. இருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் பல்வண்ண ஒளிகாலுகிற. காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வெளியிடும் பண்புடைய.
Fluorescent lamp
பாதரச ஆவி விளக்கு
fluoride
n. கனிப்பொருள் வகையின் கலவைகளின் ஒன்று.
fluorine
n. இளம்பச்சை மஞ்சள் நிறமுள்ள கனிப்பொருள் கனிமவகை.
flurry
n. வன்காற்று, திடீர்ப்புயல், குழப்பம், கலக்கம், பரபரப்பு, கிளர்ச்சி, பனிக்கட்டிகளின் தாறுமாறான கதம்பத்திரள், திமிங்கிலத்தின் மரணவேதனை, (வினை) பரபரப்பினால் குழப்பம் விளைவி, கூச்சலிட்டுக் குழப்பு, கலக்கு.
flush
-1 n. விசையொழுக்கு, கொட்டுநீர்விசை, பீற்றுவிசைத்தாரை, நீரோட்டத்திடீர்வேகம், அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை, விசைநீரலம்பல், திடீர்வளம், பொங்கு மாவளம், உணர்ச்சியின் திடீரெழுச்சி,. வெற்றி இறும்பூது, எக்களிப்பு, இறுமாப்பு, மலர்ச்சி, பொங்கு கிளர்ச்சி, புத்தூக்கம், காய்ச்சலில் திடீர் இடைவெப்பு எழுச்சி, பின் வளர்ச்சி, புல்லின் புதுவளர்ச்சி, மறுமலர்ச்சி, புதுவளர்ச்சி, புதுவளம், முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப்பாய்வு, செம்மாப்பு, சிவந்த முகத்தோற்றம், முகமலர்ச்சி, சனிவப்பு, ஒளிப்பகட்டு, நிறப்பகட்டு, ஊற்றடுத்த நீர் தோய்ந்த இடம், நீர்மலிந்த குட்டை, (பெ.) பொங்கி வழிகிற, வழிந்தோடுகிற, ஏராளமான, குறையாநிறைவளமுடைய, வற்றா ஊற்று வளமிக்க, செல்வ வளமுடைய, தடைப்படா நேர்தளப் பரப்பு வாய்ந்த, கப்பல் தளவகையில் கோடியிலிருந்து கோடியாகச்சரிசம நேர்தளமான, (வினை) விசையுடன் நீர் பீற்றியடி, வேகமாகப் பாய்ந்து மேற்சென்று கொட்டு, விசையுடன் ஒழுகு, விசையுடன் ஒழுகித் துப்புரவுசெய், விசைநீர்க்கொட்டுதலால் துப்புரவு செய்வி, நீர்ப்பெருக்கு, வெள்ளக்காடாக்கு, புதுவளமூட்டு, புத்தரும்புவிடச் செய், ஊக்கு, உணர்ச்சியூட்டு, இறும்பூது எய்துவி, இறுமாப்பு ஊட்டு, முகத்தின் நாடிநரம்புகளில் குருதி பாய்ச்சு, முகஞ்சிவக்க வை, முகஞ்சிவப்பாகு, காற்று விசையால் வீசியடி, சரிசமமாக்கு, (வினையடை) தள வகையில் கப்பலின் கோடியிலிருந்து கோடிவரை சரிநேர்தளப் பரப்பாக.ள
fluster
n. பதைபதைப்பு, படபடப்பு, வெறிமயக்கம், கலக்கம், குழப்பம், கிறர்ச்சி, (வினை) குடிவெறியாய்க் குழப்பு, அரை வெறியூட்டு, கலக்கு, நடுக்கங்கொள்ளச் செய், குழப்பமடையச் செய், பரபரப்புறு, கலக்கமடை, குழப்பமடை.