English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fust
n. மட்கிய நாற்றம், தூணின் நடுப்பகுதி, (வினை) பூஞ்சக்காளான் பிடி, மட்கல் நாற்றமடி, மிடாநாற்றம் வீசு.
fustanella
n. இக்காலக் கிரேக்க நாட்டு ஆடவர் அணியும் வெள்ளைக் குறுங்காற் சட்டை.
fustian
n. பருத்தியாலான கருநிற மணித்துவாலைத் துணி, வீண்பகட்டான பேச்சு, வீறாப்பான எழுத்து, தற்பெருமை, (பெ.) தடித்த சருச்சரையுள்ள பருத்தித்துணியாற் செய்யப்பட்ட, பகட்டான.
fustic
n. மஞ்சள்நிறச் சாயம் தரும் இருவகை மரக்கட்டைகளில் ஒன்று, மரவகைகளிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் சாயம்.
fustigate
v. குண்டாந்தடியால் அடி.
fusty
a. ஊசிப்போன, காளான் படிந்த, மட்கல் நாற்றமான, பழைய.
fut
n. படார் ஒலி, (வினையடை) படாரென்று.
futchel, futchell
வண்டியின் குறுக்குச் சட்டத்தைத் தாங்கும் படுக்கைமட்டமான துண்டுப்பலகை.
futhorc
n. பழஞ் செர்மானிய எழுத்துமுறை.
futile
a. பயனற்ற, விளைவற்ற, வீணான, அற்பமான.
futtock
n. கப்பல் தரையில் பாவியுள்ள மரப்பலகைகளுக்கும் உச்சியிலுள்ள மரப்பலகைகளுக்கம் இடையேயுள்ள பலகைகளில் ஒன்று.
future
n. எதிர்காலம், வருங்கால வாழ்வு, வருங்கால நிலை, ஆளின் வருங்கால வாய்ப்பு நலங்கள், நாட்டின் வருங்கால வளநிலை, மண இணைவுறுதி செய்யப்பட்டவர், (இலக்.) வினைகுறிக்கும் வருங்காலம், (பெ.) வருங்காலத்துக்குரிய, (இலக்.) வரப்போகும் நிகழ்ச்சியைக் குறிக்கிற.
futureless
a. வருங்கால வளர்ச்சி வாய்ப்புக்களற்ற.
futures
n. pl. வாணிகத்துறையில் கைமாற்றத்தை வருங்காலத்துக்கெனக் குறித்துக்கொண்டு வாங்கவும் விற்கவும் படும்சரக்குகள்.
futurism
n. கலை இலக்கியத்துறைகளில் புரட்சியாக மரபு அறுத்துத் தற்குறிப்பேற்றமான குறிப்பு அடையாளக் குறிகளை மேற்கொள்ளும் இக்கால முறை.
futurist
n. விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டிற் கூறப்பட்ட வருங்கால நிகழ்ச்சிகள் வாய்க்கும் என்ற கோட்பாட்டாளர்.
futurity
n. எதிர்காலம், எதிர்கால நிகழ்ச்சிகளின் தொகுதி, எதிர்கால நிலை, பஞ்சு போன்ற தலைமுடி.
fuzz
n. எளிதில் ஆவியாகும் அடர்த்தியற்ற பொருள், பஞ்சு போன்ற தூசு, பஞ்சு போன்ற தலைமுடி.
fuzz-ball
n. பந்துபோன்ற விதையுறைடைய காளான் வகை.