English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fury
n. சீற்றம், கொடுவெறி, போரில் மூர்க்கமான பாய்ச்சல், வானிலைச்சீற்றம், நோய்க்கொடுமை, ஆண்மாரி, பழிகாரி, சண்டைக்காரி.
furze
n. தரிசு நிலங்களில் வளரும் மஞ்சள் நிற மலர்கள் கொண்ட பசுமைமாறா முட்செடி வகை.
furzy
a. முட்செடி வகை நிரம்பிய.
fuse
-1 n. மின்காப்பு எரியிழை, எல்லை மீறிய மின் வலியில் உருகி இடாதடுத்துக்காக்கும் மின் இடையிணைப்பான உருகுகம்பி, (வினை) கடுவெப்பினால் உருக்கி இளக்கு, கடுவெப்பினால் உருகி இளகு, கலந்தொன்றாக்கு, கலந்திணைவுறு, திரித்தறிய முடியாமல் ஒன்றுபடுத்து, திரித்தறிய முடியாமல் ஒன்றாகு.
fusee
n. மணிப்பொறியிலுள்ள கூம்புருவ வட்டு, குதிரையின் அடிமுட்டு எலும்பில் ஏற்படும் கட்டி, சுருட்டினைக் காற்றிற் பற்றவைப்பதற்கான பெரிய தலைப்புள்ள தீக்குச்சி.
fuselage
n. வானுர்தியின் கட்டுமானச் சட்டம்.
fuseloil
n. சாராயம் புளிக்கும் போது சிறுஅளவில் தோன்றிச் சாராயத்தை நச்சுப்பொருளாக்கும் வெறியங்களின் கலவை.
fusibility
n. உருகியிளகுந் தன்மை, எளிதில் உருகுந் திறஅளவு.
fusible
a. உருகிஇளகக்கூடிய, எளிதில் உருகியிளகுந்தன்மையுள்ள.
fusiform
a. (தாவ.) இருமுனைகளிலும் ஒடுங்கிச் சுருட்டுப் போன்ற வடிவுள்ள.
fusil
n. பழங்காலச் சிறு துப்பாக்கி வகை.
fusiliers
n. pl. பழங்காலத் துப்பாக்கி படைவீரர்.
fusillade
n. தொடர் துப்பாக்கி வேட்டு, தொடர் துப்பாக்கி வேட்டு மூலமான கொலைத்தண்டனை, (வினை) தொடர் துப்பாக்கி வேட்டு வழியே தாக்கு, தொடர் துப்பாக்கி வேட்டு முலம் மொத்தமாகக் கொன்றொழி.
fusing-point
n. உருகும் எல்லைமானம்.
fusion
n. உருகியிளகுதல், உருகிய நிலை, உருகியிளகிய பிழம்பு, கூட்டுக்களவை, கலந்து முற்றிலும் ஒன்றுபட்ட பொருள், கூட்டிணைவு.
fusionism
n. கூட்டிணைப்பினை ஆதரிக்குங் கோட்பாடு.
fusionist
n. கூட்டிணைப்பாதரவாளர், கூட்டிணைப்பினை ஆதரிக்குங் கோட்பாட்டாளர்.
fuss
n. பரபரப்பு, மட்டுமீறிய அமளி, பகட்டாரவாரம், நரம்புத்துடிப்பு, படபடப்பு, அற்பகாரியத்துக்கான வெற்றார்ப்பரிப்பு, மட்டுமீறிய நுணுக்க அகல்விரிவு, (வினை) படபடப்புறு, அற்ப காரியத்துக்கான வெற்றார்ப்பரிப்புச் செய், குழப்பம் உண்டாக்கு, குழம்பித் தொல்லைப்படுத்து.
fuss-pot
n. வீண் ஆர்ப்பாட்டக்காரர், பொருளல்லதைப் பெரிதுபடுத்துபவர்.