English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
furnished
a. தட்டு முட்டுப் பொருள்கள் அமைக்கப்பட்டள்ள.
furnishings
n. pl. வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்கள்.
furniture
n. தட்டுமுட்டுப் பொருட்கள், குதிரைக்குரிய சேண முதலிய கருவிப்பொருள்கள்.
Furniture mart
அறைகலன் அங்காடி, வீட்டு வசதிப் பொருள்கள்
furore
n. ஆர்வப்பாராட்டு, பற்றார்வ வெறி, கிறுக்கு.
furrier
n. மென்மயிர்த்தோல் வாணிகஞ் செய்பவர், மென்மயிர்த்தோல் வேலைசெய்பவர்.
furring
n. கப்பலின் பக்கங்களில் மரப்பாலைகளை ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டடுக்குகளாகப் பொருத்துதல்.
furrow
n. உழுசால், கப்பல் செல்தடம், சக்கரம் சென்று தேய்ந்த வண்டித்தடம், சுவடு, மடிப்பு, ஆழ்வடு, விளிம்புப் பல் வடு, சுரிப்பு, மலைத்தொடர்களுக்கிடையேயுள்ள பள்ளத்தாக்கு, (வினை) உழு, வரிசையாக நீண்ட பள்ளங்களாக்கு, சுரிப்புப்படச் செய்.
furrow-slice
n. உழுசாலினாற் பெயர்த்துத் தள்ளப்பட்ட மண்கட்டி.
furry
a. மென்மயிருடன் கூடிய மெல்லிய விலங்குத் தோலினாலான, மென்மயிர்த்தோலினால் செய்யப்பட்ட ஆடை அணிந்த, மென்மயிர்த் தோலினால் மூடப்பட்ட.
Furry Dance
n. கார்ன்வாலில் மே மாதம் எட்டாம் நாள் கொண்டாடப்படும் பழைய தெருக்கூத்துவகை.
furs
n. pl. விலங்கு வகைகளின் குறுமென்மயிர் அடர்ந்த தோல்கள், குறுமென்மயிர் அடர்ந்த தோலாடைகள், குறு மென்மயிர்த்தோல் உள்வரி அல்லது கரை வரியாக இணைந்த உடைகள்.
furscous
a. (தாவ.) மங்கல் நிறமுள்ள, இருளார்ந்த தோற்றமுள்ள.
further
a. மிகையான, கூடுதலான, மிகுதிப்படியான, இன்னும் ஒருபடி மேற்சென்ற, இன்னும் தொலைவான, அணிமையல்லாத, (வினை) ஊக்கமூட்டு, துணைதந்து மேம்படுத்து, ஆதரவாற் பேணி வளரச்செய், (வினையடை) இனியும், இனிமேலும், இன்னும் மிகுதியாக, இது மட்டுமல்லாமல், இன்னொரு வகையிலும், அன்றியும்.
furtherance
n. உதவி, துணை, நிறைவேற்றுதல்.
furtherer
n. முன்னேற்றுபவர்.
furthermore
adv. இன்னமும், மேலும், அல்லாமலும், அன்றியும்.
furthermost
a. உறுதொலைவிலுள்ள, தொலைக்கோடியில் உள்ள.
furthersome
a. உதவுகிற, சாதகமான, துடுக்கான.
furtive
a. கள்ளத்தனமான, திருட்டுத்தனமான, ஒளிவுமறைவாகச் செயலாற்றுகிற, கபடமான.