English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
flustra
n. கடற்பாசியை ஒத்த தோற்றமுடைய கடல்வாழ் உயிரின வகை.
flute
n. குழல், புல்லாங்குழல், இசைக்கருவியில் குரலோசை எழுப்பும் அழுத்து கட்டை, தூண் முதலியவைகளில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப்பள்ளம், திரைச்சிலை நெசவுத்தறியின் ஓடம், (வினை) குழலுது, குழலோசை எழுப்பும் வகையில் சீழ்க்கையடி, குழலிசைக் குரலிற் பேசு, தூணில் செங்குத்தான நீள்வரிப்பள்ளமிடு.
fluted
a. தூணில் செங்குத்தான வரிப்பள்ளங்களினால் ஒப்பனை செய்யப்பட்ட.
fluting
n. குழல் ஊதல், குழலிசைபோன்ற ஒலிகளை எழுப்புதல், தூணில் செங்குத்தான நீள் வரிப்பள்ளம் இடுதல், நீள்வரிப் பள்ளமிட்ட வேலைப்பாடு.
flutter
n. சிறகடிப்பு, பதைபதைப்பு, துடிதுடிப்பு, கலசல், படபடப்பு, பரபரப்பு, துடிப்பு, ஒழுங்கிலா அதிர்வு, இரைச்சல், மனவெழுச்சி, கிளர்ச்சி, அவசரச் சீட்டாட்டம், சூதாட்ட நடவடிக்கை, சிறிய ஆதாயவேட்டை முயற்சி, (வினை) சிறகடித்துக்கொள், சிறகடித்த வண்ணம் மேலே தவழ்ந்து நில், சிறகடித்துச் சிறிதுதொலை பற, சிறகடித்துக் கொண்டு விழு, பரபரப்புடன் அங்குமிங்கும் திரி, கலக்கமடை, தயக்கமுற்றுக் கலங்கு, நாணயத்தைச் சுண்டிவிடு, குழப்பமுறுவி, மனங்கலங்கச் செய், விரை இயக்கங்களுடன் செய், நடுங்கு, அதிர்வுறு, துடி, உணர்ச்சிக் கொந்தளிப்பால் நடுக்கமுறு, கொடி முதலியவற்றைப் படபடப்புடன் ஆட்டு, நாடி நரம்புகள் வகையில் ஒழுங்கின்றித் தளர்ந்து அடி.
fluty
a. குழலிசை போன்ற, தௌிவும் மென்மையும் வாய்ந்த.
fluvial
a. ஆற்றுத் தொடர்பான, ஆறுகளிற் காணப்படுகிற.
fluviatic, fluviatile
a. ஆறுகளுக்குரிய, ஆறுகளில் காணப்படுகிற, ஆறுகளினால் ஆக்கப்படுகிற.
fluvio-glacial
a. பணியாறுகளின் தொடர்பான.
flux
n. குருதிக் கழிச்சல், பேதி, மலம், எச்சம், சீழ்க்கசிவு, சீழ், எளிதில் உருகும் பொருள், எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள், ஒழுக்கு, பாய்வு, வெளியேற்றம், வெளியேறிய பொருள், கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு, குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம், பேச்சுப்பெருக்கு, இடைவிடாப்பேச்சு, தொடர்ந்த மாறுபாடு, கணக்கியலில் இடைவிடாத்தொடர், பெயர்ச்சி இயக்கம், (வினை) உருக்கு, உருகு, பாய், பெருகியோடு, இடைவிடாது இயங்கு.
fluxion
n. பாய்வு, கழிவு, (மரு.) குருதிக் கழிச்சல், (கண.) தொடர் பெருக்க எண்ணின் மாறுபாட்டு வீதம்.
fluxional, fluxionary
a. மாறுமியல்புள்ள, நிலையற்ற.
fluxions
n. pl. முற்காலக் கணிப்புமான முறை.
fly
-1 n. ஈ, பூச்சியின வகைகளில் ஒன்று, தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் ஈ, தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஈ.
fly-away
a. உடுப்பு வகையில் காற்றில் அலையாடுகிற, தளர்த்தியான, மக்கள் வகையில் ஏறுமாறான போக்குடைய.
fly-belt
n. ஆப்பிரிக்கநாட்டு நச்சு ஈ வகையினாற் பீடிக்கப்படும் நிலப்பகுதி.
fly-bitten
a. ஈக்கடியினால் உண்டாவதைப் போன்ற வடுவினைக்கொண்ட.
fly-by-night
n. இரவு நேரங்களில் வீணாகச் சுற்றித் திரிபவர், கரந்துறையும் கடனாளி.
fly-over
n. பாதை தாவிச்செல்லும் பாலம், அணி வரிசையாகப் பறக்கும் வானுர்தித் தொகுதி, (பெ.) மேலே தாவிச் செல்கிற.