English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fodder
n. தீவனம், கால் நடைத் தீனி, விலங்குணவு, (வினை) தீவனம்கொடு.
foe
n. எதிரி, பகைவர், தீங்கு நினைப்பவர், எதிர்ப்பவர், போரில் எதிராளி.
foeman
n. போரில் எதிரி, பகைவர்.
foeticide, feticide
கரு அழிப்பு, கருச்சிதைவு.
foetus
n. முதிர் கரு, முட்டையின் முதிர் கருமுனை.
fog
-1 n. மூடுபனி,. தௌிவின்மை, மங்கலான நிலை, மப்புநிலை, இருளடைந்த இயற்சூழ்நிலை, நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம், (வினை) மூடுபனியால் மூடிமறை, பனி மூடாக்கிடு, குழப்பமாக்கு, மலைக்க வை, பனியால் வாடு, நிழற்படத் தகட்டை மங்கலாக்கு, இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்பு அடையாளமிடு.
fog-bank
n. மூடுபனித்திரள், நிலக்கரை போன்ற மூடுபனித்திரள்.
fog-bell
n. முடுபனியின் போது மாலுமிகளை எச்சரிப்பதற்காக அலைகளாலும் காற்றாலும் அடிக்கப்படும் மணி.
fog-bound
a. மூடுபனியால் முன்னேறாமல் தடைசெய்யப்பட்ட.
fog-bow
n. பனி வில், ஒளியாற்றலால் மூடுபனியில் தோன்றும் வெண்மையான வானவில் போன்ற வளைவு.
fog-dog
n. மூடுபனிக்காலத்தில் அடிவானத்திற்கருகிற் காணப்படும் சிறிது வெண்மையான புள்ளி.
fog-horn
n. மூடுபனிக்காலத்தில் கப்பல்களை எச்சரிக்கை செய்வதற்குப் பயன்படும் ஊதுகொம்பு.
fog-signal
n. மூடுபனிக்காலத்திற் பயன்படுத்தப்படும் வெடி ஒலி எச்சரிக்கை.
fogged
a. மேகம் சூழ்ந்த, தௌிவற்ற, மங்கலான, குழப்பமான, பதற்றமான.
fogger, fogman
இருப்புப்பாதையில் மூடுபனி எச்சரிக்கை அடையாளங்களை இயக்குபவர்.
foggy
a. ஈரமான, மூடுபனி கவிந்த, இருளார்ந்த, தௌிவில்லாத, மனத்தௌிவற்ற, குழப்பமான, அறிவில்லாத மடத்தனமான.
fogless
a. மூடுபனியில்லாத, தௌிவான.
fogy
n. பழங்கால நடையுடைய மேற்கொண்டவர், பத்தாம்பசலி.
Fohn
n. (செர்.) ஆல்ப்ஸ் மலையில் அடிக்கும் வெப்பமான தென் திசைக்காற்று.
foible
n. வலுக்கேடு, குறைபாடு, இழுக்கு, இயற்கை வழு, இயற்கை ஈடுபாடு, வாளின் முன் அலகுப்பகுதி.