English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
foil
-1 n. பலகணி விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு செதுக்கு வேலையின் குழிவுப்பள்ளம், அடித்துத் துவைக்கப்பட்ட உலேராகத்தால் சுருள், முகக்கண்ணாடியின் முற்படபதிக்கப்பட்ட உலோகத்தாள் தகடு, முகக்கண்ணாடியின் பின்னனித்தளமான வெள்ளீயப் பாதரசக் கலவைப் பூச்சு, பதிக்கப்படும் மணிக்கல்லின் பின்னணியான உலோகத்தகடு, உலோக மெருகூட்டப்பட்ட தாள், தோற்றத்தை எடுத்துக்காட்டும் பின்னனி, (வினை) விளிம்படை வளைவுப்பள்ளம் உருவாக்கி ஒப்பனைசெய், பின்னனி உலோகத்தகட்டு மெருகிட்டு ஒளிபகட்டிக் காட்டு, எதிர்வண்ணப் பின்னனி மூலம் தோற்றத்தைப் பகட்டாக எடுத்துக் காட்டு.
foist
v. இடைச்செருகு, இன்னொருவர் தலையில் வைத்து கட்டு, மற்றொருவர் பெயரால் உலவவிடு, போலியை நல்லதெனக் காட்டிப்பரப்பு.
fold
-1 n. ஆடுகளை அடைக்கும் பட்டி, திருச்சபை, சமயப்பற்றாளர் குழு, (வினை) பட்டியில் அடை, ஆட்டுக்கிடை வை.
folders
n. pl. மடக்கவல்ல மூக்குக்கண்ணாடி.
folding
n. மடிப்பு, பின்னல், (மண்.) அழுத்தத்தினால் ஏற்படும் நிலப்படுகையின் மடிப்பு, (பெ.) மடிக்கிற, மடிக்கப் படுகிற.
Folding furnitures
மடக்கு அறைகலன்கள்
folding-machine
n. அச்சடித்த தாள்களைத் தானே மடிக்கும் இயந்திரம்.
foliaceous
a. இலைகள சார்ந்த, இலை போன்ற, இலை வடிவான உறுப்புக்களையுடைய, தகடுகளாக்கப்பட்ட.
foliage
n. இலைத்தொகுதி, இலைகளின் திரள், கலையில் சித்திரிக்கப்பட்ட இலைத்தொகுதி.
foliar
a. இலை சார்ந்த, இலை போன்ற.
foliate
a. இலைபோன்ற, இலைகளையுடைய, (வினை) தகடு தகடாகப் பிள, தாள் தகடுகள் கொண்டு அழகுசெய், ஏட்டின் தாள்களுக்குத் தொடர்ச்சியெண் குறி.
foliation
n. செடிகள் இலை விடுதல், உலோகத்தை மென் தகடாக அடித்தல், கண்ணாடியின் பின்புறம் மெல்லிய தகட்டினை வைத்து முகப்பார்க்கும் கண்ணாடியாக்குதல், புத்தகத்தின் தாள்களின் எண்குறித்தல்.
folio
n. கணக்கேட்டில் எதிரேதிரான இரு பக்கங்கள், இருபுற இணைப்பக்கம், இருமடி, ஒருதடவை மடித்த தாள், ஒரு மடிப்புடைய புத்தகம், பேரகல அளவான புத்தகம் ஹ்2 அல்லது ஹீ0 சொற்களை அளவாகக்கொண்ட பத்திர நீள அலகு, அச்சடித்த புத்தகத்தாள் எள், முன்புறம் மட்டுமே எண் குறிக்கப்பட்ட தாள், (பெ.) ஒரு மடிப்புடைய.
foliole
n. கூட்டிலையில் உறப்பான சினையிலை.
folk
n. மக்கள், நாடு, இனம்.
folk-dance
n. மக்கள் நடனம்.
folk-lore
n. மக்கள் மரபாராய்ச்சி, மக்கள் மரவுவழிப் பழக்கவழக்கக் கோட்பாட்டுத் தொகுதி.
folk-song
n. மக்கள் பாடல், நாட்டுப்புறப்பாட்டு.
folk-tale
n. மக்கள் மரபுக் கதை, பழங்கதை.