English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fontal
a. தீக்கைக்குரிய நீர்வைக்கும் கலம், விளக்கின் எண்ணெய்ச சேமகலம்.
fontanel, fontanelle
n. குழந்தையின் தலையில் எலும்பு வளராது மென்தோல் மட்டும் உடைய உச்சி மையம்.
food
n. உணவு, விலங்கின் தீனி, இரை, செடியினத்துக்குரிய உணவுச்சத்து, உணவுப்பொருள், ஊட்டம், உணவுக்குவை, உண்ணத்தக்க பொருள், உணவு வகை, வளர்ச்சிக்கு உணவுங் கூறு, ஆதாரம், மூலப்பொருள்.
food-stuff
n. உணவுப் பண்டம்.
fool
-1 n. அறிவிலி, பேதை, முட்டாள், திறமையற்றவர், அப்பாவி, வெள்ளையுள்ளத்தவர், ஏமாளி, கோமாளி, விகடன், பட்டிக்காட்டான், (வினை) ஏமாற்று, வீணாகச் செலவழி, காலத்தை வீணாக்கு, பொறுப்பற்று நட, சிறு பின்ளைத்தனமாகச் செயலாற்று.
foolery
n. மதிகேடு, மடத்தனம்,. மடமைச் செயல், ஏமாற்று.
foolhardy
a. மடத்துணிவுடைய, தறுதலையான.
foolproof
a. எவரும் தவறாகப் புரிந்துகொள்ள முடியாத படி மிகவும் தௌிவாகவுள்ள, எவ்வளவு கவனக்குறைவினாலும் சேதமுற முடியாத படி மிகவும் உறுதிவாய்ந்த.
fools-cap
-1 n. கோமாளியின் குல்லாய், தாள் கூம்புதொப்பி.
foolscap
-2 n. எழுதுவதற்கும் அச்சிடுவதற்கும் பயன்படும் தாள் அளவு 1ஹ்க்கு13 1க்ஷீ2 முற்காலத் தாளின் நீர்க்குறி.
foot
n. காலடி, பாதம், விலங்கின் கால், ஊர்வனவற்றின் இயங்கு உறுப்பு, தட்டுமுட்டுப் பொருள்களின் ஆதாரக்கம்பம், காலடி எடுத்துவைக்கும் தொலை, நடைப்பாணி, நடைவேகம், அடிப்பகுதி, முனைப்பான கீழ்ப்பகுதி, கட்டிலடி, செய்யுளடியின் சீர், அடி, பன்னிரண்டு அங்குல நீளமுள்ள நீட்டலளவைக் கூறு, (தாவ.) இழிணைக்கும் உறுப்பு அல்லது பகுதி, மலையடிவாரம், குன்று அடிப்புறம், ஏணியின் கீழ்ப்படி, சுவரடி, பட்டியல் இறுதிப்பகுதி, பக்கக் கீழ்ப்பகுதி, வகுப்பின் இறுதிக் கூறு, வண்டல், மண்டி, எண்ணெய்க்கசடு, வண்டல் சர்க்கரை, (வினை) நடனமாடு, கால் அடியெடுத்துவை, நட, காலுறைக்குப் புதிய அடிப்பகுதி இடு, தொகை கூட்டு, தொகை ஏறு, விலைப்பட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர்.
foot-and-mouth disease
n. கோமாரி, கால்நடைகளுக்கு வரும் நோய் வகை.
foot-bar
n. தாள்பதி கட்டை.
foot-bridge
n. நடைப்பாலம்.
foot-drill
n. காலால் இயக்கப்படும் துறப்பணம்.
foot-fault
n. எல்லைக்கோட்டின்மேல் அடி வைக்கும் தவறு.
foot-gear
n. காலுறை புதைமிதிகள்.
foot-licker
n. அடிவருடி, அடிமைத்தனமாக இச்சகம் பேசுபவர்.
foot-muff
n. காலடிகள் குறிருறாமல் காக்கும் மென்மயிர்த்தோலாலான நீளுருளை.
foot-note
n. அடிக்குறிப்பு.