English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
figurative
a. உருவமைப்புச்சார்ந்த, உருவப்படுத்திக்காட்டுகிற, வடிவக்கலைசார்ந்த, உருமாதிரியான, உவம உருவகமான, அணிவளஞ்செறிந்த, அணிவகைகளை நிரம்ப வழங்குகிற, குறித்துக்காட்டுகிற, குறிப்பில் தெரிவிக்கிற, சுட்டிக்காட்டுகிற, ஒன்றுகூறி மற்றொன்று உய்த்துணர வைக்கிற.
figure
n. புறவுரு, உருவம், வடிவம், தோற்றம், உடலுரு அமைதி, அங்கவடிவமைப்பு, ஆள்வடிவம், ஆள், கருத்துருவம், பண்புருவம், சிறப்பியல்பு, சிறப்புத் தன்மை, உருவப்படிவம், சிலை, சித்திரம், உருமாதிரி, மாதிரிச்சின்னம், உருவரைப்படிவம், உருவரைப்படிமம், உருவரைப்படம், விளக்கப்படம், பிறப்புப்பட்டி, சாதகம், எண் இலக்கம், ஒப்பனைப் படிவம், உவம உருவக அணிவகை, பேச்சுத்திற அணி, சொற்சித்திரம். (இசை.) சுரவரிசைக் சித்திர அணி, ஆடல் முறை வகுப்பணி, பனிச்சறுக்காட்ட வகையில்மைய நோக்கிய அணி இயகக்ப்போக்கு, (அள.) வாய்பாட்டுத் தலைச்சொல் அமைதி, (வினை)உருவகப்படுத்திக்காட்டு, கருத்தில் உருப்படுத்திக்காண், கற்பனைசெய், புனைந்துருவாக்கிக் காட்டு, சின்னமாயமை, உருமாதிரியாயமை, உருவமைதி வேலைப்பாட்டுடன் ஒப்பனை செய், எண் இலக்கமிடு, விலை குறிப்பிடு, கணி, கணக்கிடு, தொகைப்படுத்து, தோன்று, முனைப்பாகக் காட்சியளி, உருக்கொண்டு இயலு, பண்போவிய உருக்கொண்டு நடி.
figure-dance
n. தௌிவான பகுதிகளுடன் வகுத்தமைத்த அணிநடனக் காட்சி.
figure-dancer
n. வகுத்தமைத்த அணிநடனம் ஆடுபவர்.
figure-head
n. கப்பலின் முகப்பிலுள்ள உருவத்தலை, பெயரளவில் மட்டும் தலைமை ஏற்கும் பொம்மைத்தலைவர், உரிமையற்ற தலைவர், செயலற்ற போலித்தலைவர்.
figurine
n. சிறு உருவச்சிலை.
figurist
n. உருவங்களைக் கொண்டு விளக்குபவர், உருவங்களைப் பயன்படுத்துபவர்.
filament
n. இழை, நார்வடிப் பொருள், (தாவ. உயி.) நுல் போன்ற உறுப்பு, உருகாது அழலொளிவிடும் மின் குமிழ் இழை, நீரோட்டத் துகள் வரிசையில் கற்பனையாகக் காணப்படும் வரியிழை, தூசிழை வரி.
filamentary
a. இழை போன்ற.
filatory
n. நுல் உருவாக்கும் அல்லது பின்னும் இயந்திரம், நுற் பொறி.
filature
n. புழுக்கூட்டிலிருந்து பட்டுநுலை உருளையில் சுற்றதல், பட்டு இழை சுற்றவதற்கான அமைப்பு.
filbert
n. பண்படுத்தப்பட்ட பழுப்பு நீல நிறமுள்ள கொட்டைவகை, கொட்டைவகை தரும் மரம்.
filch
v. களவு செய், சிறு அளவில் திருடு.
file
-1 n. அரம், அராவுவதற்குரிய எஃகுக்கருவி, பளபளப்பாக்கும் வகைமுறை, செப்பமிக்க இலக்கிய அமைக்கும் வழிமுறை, ஆழ்ந்த சூழ்ச்சித்திறமுள்ளவர், ஏமாற்றுபவர், ஏய்ப்பவர், ஆள், திருட்டுப்போர்வழி, (வினை) அராவு, அராவி மழமழப்பாக்கு, சமப்படுத்து, தேய்த்துக்குறை, அராவிக்குறுக்கு, இலக்கியநடையைச் செப்பமாக்கு.
filemot
n. சருகிலை நிறம், (பெ.) சருகிலை நிறமுள்ள, தவிட்டு நிறத்தோடு கூடிய மஞ்சள் நிறமுள்ள.
filet
n. சதுரக் கண்ணுள்ள வலை வகை.
filial
a. மகவுரிமை சார்ந்த, மகன் அல்லது மகளுக்குரிய, புதல்வர் புதல்வியரிடமிருந்து எதிர்பார்க்கத்தக்க.