English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
filter-bed
n. வடிகட்டு தளம், மிகுதியாக நீர் வடிகட்டுதற்கான மணற்படகை.
filter-paper
n. வடிகட்டுதாள்.
filth
n. அருவருப்பான அழுக்கு, மாசு, கழிவுப்பொருள், குப்பை, அழுக்குடைமை, தீட்டுடையது, தகாத நடை, இழி ஒழுக்கம், கீழ்மக்கள் மொழி, கொச்சை மொழி.
filtrate
n. வடிகட்டிய நீர்மம், (வினை) வடிகட்டு, ஊறிச்செல்.
filtration
n. வடிகட்டுதல், வடிகட்டுமுறை.
fimbriate, fimbriated
a. (தாவ., வில.) விளிம்பில் மயிரிழையுடைய.
fin
n. துடுப்பு, மீனின் உகைப்பியக்க உறுப்பு, துடுப்புப்போன்ற உறுப்பு, வானுர்திப் பின்புறத்தின் நிமிர் நேர் விளிம்பு, நிமிர் நேர் விளிம்புடைய தகடு.
fin de siecle
a. (பிர.) பத்தொன்பதாம் நுற்றாண்டு இறுதியின் தனிப்பட்ட இயல்புடைய, முன்னேற்றமான, தற்காலத்திற்குரிய, புதுமையான, சரிகிற.
final
n. இறுதி ஆட்டம், வெற்றி தோல்வி தீர்மானிக்கும் கடைசி விளையாட்டு, சொல்லின் இறுதி எழுத்து,.இறுதி ஒலிக்குறி, இசையில் பண்ணின் முக்கிய சுரம், கல்வித்தேர்வு வரிசையில் கடைசி ஆண்டிறுதித்தேர்வு, (பெ.) இறுதியான, கடைசியான, முடிவான, ஐயத்திற்கு இடமற்ற, அறுதியான, மாற்றமுடியாத, நோக்கம் சார்ந்த, முடிவுடன் தொடர்புடைய.
finale
n. நாடக இறுதி, கடைக்காப்பு, இசைநிகழ்வின் முடிப்பு, மங்களம், முத்தாய்ப்பு, இறுதி மகுடம்.
finalist
n. கடை ஆட்ட உறுப்பினர், இறுதி ஆட்டத்தில் பங்குகொள்ளும் விளையாட்டுக்காரர்.
finality
n. முடிந்த முடிவு, கடைமுடிவு, மேல் தொடர்புக்கு இடமில்லாத முடிவு, ஐயத்துக்கிடமில்லா நிலை, அறுதி முடிவு, இறுதி நிகழ்ச்சி, அறுதிசெய்யும் மூலகாரணம்.
finalize
v. நிறைவேற்று, முடிவுக்குக்கொண்டுவா.
finals
n. pl. தேர்வு வரிசையில் கடைசி, இறுதித்தேர்தவு, ஆண்டிறுதித்தேர்வு.
financial
a. பொருள்பற்றிய, வருவாய் சார்ந்த, நிதிநிலைக்குரிய.
financier
-1 n. பொருளியியல் ஆட்சி வல்லுநர், நிதிவிவகாரங்களில் திறமையுடையவர், பொது வருமானத்துறை ஆட்சியாளர்.
find
n. கண்டுபிடிப்பு, கண்டுபிடித்த பொருள், புதையல், கனிப்பொருள் முதலியவற்றின் அடிநிலத்தடக்காட்சி, வேட்டையில் நரி இருக்கும் இடம் கண்டுபிடித்தல், (வினை) கண்டுபிடி, தேடி எடு, முயன்று காண், கண்டுனர், ஆய்ந்து முடிவுசெய், நேரிட்டறி, பட்டறி கண்டுகொள், எதிருறு, கண்ணுறு, நேர்பட்டுக்காண், காண், அடை, எய்தப்பெறு, தேடிக்கொடு, அறியப்பெறு, தெரியப்பெறு.
finder
n. இலக்கடைவுக்கருவி, பெரிய தொலைநோக்காடியைப் பொருள்மீது பொருத்த உதவும்படி அதனுள் அமைந்த சிறு தொலைநோக்காடி, உருப்பெருக்கியின் குறியடைவு அமைவு, நிழற்படக்கருவியின் இலக்கடைவு அமைவு.