English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
filiation
n. மகவுத் தொடர்பு, நேர்மரபுவழி உறவு, கிளை விரித்தல், மொழி இனக் கிளைத் தோற்றம், மக்கள் இனக்கிளை வழித் தோற்றம், மரபுக் கொடித் தொடர்பு, மரபுக்கொடி ஒழுங்கு.
filibuster
n. அயல்நாட்டோடு தன்நாட்டுச் சட்ட உரிமை யில்லாமலே சண்டையில் ஈடுபடுபவர், நாடுகடந்து கொள்ளையிடும் படைவீரர், சட்டமன்றத்தில் முட்டுக்கட்டை யிடுபவர், (வினை) அயல்நாட்டுடன் நாட்டுரிமையில்லாமலே போரில் ஈடுபடு, சட்டமன்றத்தில் முட்டுக்கட்டையிடு.
filibusterer
n. அயல்நாட்டோடு சட்டப்படி உரிமையற்ற சண்டையில் ஈடுபடுபவர், சட்டமன்றத்தில் முட்டுக்கட்டையிடுபவர்.
filigree
n. சரிகைச் சித்திரவேலை, கசவுப்பூவேலை, நொய்ம்மையான மினுக்க வேலைப்பாடு.
filings
n. அராவல் தூள், துண்டுத்துணுக்குப் பொடித்திரள்.
fille de chambre
n. (பிர.) மனைப்பணிப்பெண்.
fille de joie
n. (பிர.) பொதுமகள், விலைமகள்.
fillet
n. தலைப்பட்டி, மயிர்க்கொடி, தலைமுடிகட்டும் இழைக்கச்சை, நாடா, கட்டு, பட்டை, மேடான இடை விளிம்பு, ஏட்டு மேலுறையின் பட்டைக்கோடு, மெல்லிய நாடாப்போன்ற பொருள், விலா இறைச்சித் துண்டு, இடுப்பின் எலும்படி இறைச்சித்துண்டு, எலும்பு நீக்கிய கன்றின் காலிறைச்சிச் சுரணை, மாட்டிறைச்சிச் சுருளை, மீனிறைச்சிச் சுருனை, கொழுமீன் கண்டம், (கட்.) கேடய முகட்டின் அடித்தளக் காற்கூறு, (க-க.) கட்டுமான உருவின் இடைப்பட்டைட, (வினை) தலைப்பட்டி வரிந்துகட்டு, இழைக்கச்சை கட்டி அணிசெய், தலைப்பட்டியால் ஒப்பனைசெய், இழைக்கச்சையால் கட்டு, மீனைக் கண்டமாகத் துண்டுபடுத்து.
filling
n. நிரப்புவதற்கோ தொளையடைப்பதற்கோ நிறைவுசெய்வதற்கோ பயன்படும் ஒன்று, வழங்குதல்.
fillip
n. சொடக்கு, விரல் நொடிப்பு, சுண்டியடித்த அடி, சுண்டுகை, சிட்டிகையளவு, சிறுதுணுக்கு, தூண்டுதல், (வினை) சுண்டி அடி, விரல்களால் தெறித்து எறி, தூண்டுதல் கொடு, கிளறி ஊக்குவி, சொடக்கிவிடு, விரல் நொடி.
fillister
n. பலகணிக்கண்ணாடியின் சறுக்குச்சட்டம்.
filly
n. பெண் குதிரைக்குட்டி, துடுக்கான இனஞ்சிறுமி.
film
n. மென்தாள், மெல்லிய சவ்வு, மென்தோல், மென்படலம், மென்பூச்சு, நீரில் மிதக்கும் மென்புரை, கண்ணை மறைக்கும் மென்திரை, பார்வை மங்கல், மென்திரை முகமூடி, மெல்லிழை, மென்பசை பூசப்பட்ட நிழற்படத்தகடு, திரைப்படச் சுருள் தகடு.
film-fan
n. திரைப்பட ஆர்வலர்.
filmy
a. மென்புரைபோன்ற, மென்புரையாலான, மென்புரை முடிய, வலைபோன்ற, மங்கலான, ஒளிமறைக்கிற.
filoselle
n. கழிவுப்பட்டு,
filter
n. வடிகட்டும் அமைவு, கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு, (வினை) வடிகட்டு, ஊறிச்செல், ஊடாகச்செய், துப்புரவாக்கு, தூய்மையாக்கு, செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு, வெளிப்படு.
Filter cigarette
வடிமுனை வெண்சுருட்டு