English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
effluence
n. வழிந்தோடுதல், மற்றொன்றினின்று வெளிப்படுதல், ஒளியின் புற ஏழுச்சி, மின்வலியின் புறஒழுக்கு, புறஞ்செல்வது.
effluent
n. ஏரியிலிருந்து வெளிச்செல்லும் ஆறு, மறிகால், மற்றோர் ஆற்றிலிருந்து பிரிந்தோடும் கிளையாறு, புறக்கிளைக் கால்வாய், புறக்கிளை ஓடை, கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வெளிச்செல்லும் வடிகால், கழிவு நீர்த் தேக்கத்துப்புரவு நீர்க்கால், தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீரியற்கழிவு,(பெ.) புறஞ்செல்கின்ற, வழிந்தோடுகிற.
effluvium
n. பொருளிலிருந்து வெளிப்படும் நுண்ணிய அணுக்கள், அழுகிய பொருள்களிலிருந்து வெளிப்படுகின்ற உடல்நலத்துக்கு ஒவ்வா வாடையுடைய தீயாவி, காந்தத் தால் வெளியிடப்படுவதாகக் கருதப்பட்ட நுண் துகள் திரள்.
efflux, effluxion
நீரியல் ஆவியியல் பொருள்கள் வகையில் புறநோக்கிய ஒழுக்கு, கடத்தல், புறவொழுக்கு,*,
effort
n. ஊக்கம், முயற்சி, ஆற்றலை ஈடுபடுதத்திய செயல், அருஞ்செயல், தொடர்ந்த உழைப்பு, முயற்சியின் பயனாய் விளைந்த செய்தி, அருஞ்செயல் விளைவு.
effortless
a. முயற்சியற்ற, எளிதான, முயற்சி எடுத்துக் கொள்ளாத, செயல்முனைப்பற்ற, தன்முயற்சியற்ற, ஏனோ தானோ என்றிருக்கிற.
effrontery
n. வெட்கமில் ஆணவம், நாணழிவு, அகந்தை.
effulge
v. ஒளி துலங்கு, ஒளிபெறு.
effulgent
a. சோதியான, பொரொளி விடுகிற.
effusion
n. (தாவ.) வழிந்துபோன, (வினை) ஊற்று, வெளிப்படுத்து, சிந்து, கொட்டு, இறை, வழி.
effusive
n. அதிக அளவில் சொரிந்த, பீறிடுகின்ற மலைக்குரிய உருக்குப்பொருள் வெளிக்கொட்டிய, உறுதிப்படுத்தும் வகையில் அதிக உணர்ச்சி காட்டுகின்ற.
egad
int. 'அட கடவுளேஸ்' என்னும் வியப்பு மொழி.
egatherium
n. மரபற்றுப்போன கரடி போன்ற தழையுணிப் பெருவிலங்கு.
Egeria
n. பெண் ஆலோசகர், ஒரு குலதெய்வம்.
egg
n. முட்டை, கரு, உயிரணு, ஈருயிரின்பச் சேர்க்கையின் உயர்விளைவு, கோழி முட்டை போன்ற பொருள், (வினை) தூண்டு, விரைவுபடுத்து.
egg-and-anchor
n. நங்கூரத்தின் அல்லது அம்புகளின் இடையே வார்ப்படத்தாலான முட்டைவடிவப் பொருள்களை ஒன்றையடுத்து ஒன்றாகப் பதித்தமைத்த அணிவகை.
egg-bird
n. கரிய கடற்பறவை வகை.
egg-capsule
n. சலவகை விலங்குகளின் முட்டைமேல் மூடியிருக்கும் காப்புறைத் தோல்.