English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
editress,
n. fem. பதிப்பாசிரியை, இதழாசிரியை.
educate
v. பேணிப்பயிற்றுவித்து வளர், அறிவொழுக்கப் பயிற்சியளி, அறிவுபகட்டு, கலவியளி, பள்ளியில் பயிற்றுவி, பயிற்றுவித்துப்பழக்கு, செயலுக்குப் பழக்கப்படுத்து, பழக்கு, பண்பூட்டு.
education
n. கல்விப்பயிற்சியளித்தல், கல்விப்பயிற்சி, கல்விப்பயிற்சித்திட்டம், வளர்ப்புப்பயிற்சி, மனப்பண்புப்பயிற்சி, விலங்குகளின் பயிற்றுவிப்பு, பழக்குவிப்பு.
educationalist, educationist
n. கல்வித்துறை வித்தகர், கல்விபுகட்டு முறைகளில் தனித்திறமை பெற்றவர், கல்வி வளர்ப்பவர்.
educative
a. கல்வி சார்ந்த, கல்விக்குரிய, அறிவுறுத்துகிற, கல்விபுகட்டவல்ல.
educe
v. உள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர், புறமலர்ச்சியுறச்செய், தருகூறுகளிலிருந்து முடிவு தருவி, புது மெய்ம்மை உறுவி, உய்த்துணர், (வேதி.) பொருட் கூட்டிலிருந்து பிரித்தெடு, வேறுபிரித்துக்காட்டு.
educt
n. உய்த்துணர் மெய்ம்மை, வருவிக்கப்பட்ட முடிபு, (வேதி.) பிரித்தெடுக்கப்பட்ட பொருள்.
eduction
n. வெளிக்கொணர்தல், புறமலர்ச்சி, இயந்திரங்களின் நீராவி முதலிய வற்றின் வெளிப்போக்குக் குழாய்.
edulcorate
v. கடுஞ்சுவை நீக்கு, இனிக்கச் செய், கரையத்தக்க கூறுகளற்றித் துப்புரவுபடுத்து, தூய்மையாக்கு.
eel
n. மலங்கு, விலாங்கு மீன்கள், எளிதில் பிடிகொடாத மனிதர், ஓயாது தட்டிக்கழிப்பவர்.
eel-pout
n. நன்னீர் மீன் வகை, குட்டியீனுகின்ற மீன் வகை.
eel-set,
n,. விலாங்குமீன் பிடிப்பதற்காக அற்றின் குறுக்கே இடப்பட்ட வலை.
eelfare
n. இளவிலாங்கு மீன்கள் புடைபெயர்ந்து செல்லும் பாதை, விலாங்கு மீனின் ஓரீற்று இளமீன் தொகுதி, இள விலாங்கு மீன்.
eelgrass
n. கோரைப்புல் போன்ற கடற்பாசி வகை.
eerie, eery
முன்பின் எதிர்பாராத, இன்னதென்றறியப்படா அச்சம் விளைவிக்கிற, பேயச்ச மூட்டுகிற, இயற்கை மீறிய மாய உணர்ச்சியால் தாக்குண்ட, துணுக்குறச் செய்யக்கூடிய, மயிர்க்கூச்செறிய வைக்கிற, நடுக்குறுவிக்கிற.
efface
v. துடைத்தழி, தடங்கெட வை, மேற்பரப்பின் உருவழி, ஒளிமறைப்புச் செய், மங்க வை, விஞ்சி ஒளிவிடு, முனைப்பு அழி, உரு மறைத்து விடு, சிறப்புக் குன்றவை.
effect
n. பலன், விளைவு, விளைபடன், பண்புவிளைவு, உளத்தில் ஏற்படும் மாறுதல், முகத்தோற்ற மாறுதல், முகபாவனை மாறுதல், மெய்ந்நிலை, மெய்ப்பாடு, செயல் திட்பம், பயனுரம், உட்கருத்து, சாயல் நுட்பம், தோற்றச்செவ்வி, (வினை) செயலுருப்படுத்து, செயல் வெற்றி காண், செய்து முடி, செயலுருவாக்கு, தோற்றுவி.
effectible
a. செய்து முடிக்கத்தக்க.
effective
n. போருக்கு ஆயத்த நிலையிலுள்ள படைவீரன், போர் முனைப்பு நிலையிலுள்ள படைப்பிரிவு, (பெ.) செயல் விளைவுடைய, பயனுறுதியுள்ள, செயலுக்கமுடைய, விளைபஸ்ன் திட்பம் வாய்ந்த, செயலுமிக்க, ஆற்றல் வாய்ந்த, விளைவின் வலிமை முழுதுமுடைய, பயன்முனைப்பான, பயனுடைய, சேவைக்கு ஆயத்த நிலையிலுள்ள, மெய்யான, நடப்பிலுள்ள.