English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
edgeless
a. கூர்அற்ற, மலுங்கிய.
edgeways, edgewise
கூர்விளிம்புமுன்னாக, கூர்விளிம்பு மேலாக, பக்கவாட்டாக, விளிம்போடு விளிம்பு சேர.
edginess
n. கோணமுடைமை, வரைக்கோடு மிகத் தௌிவாயிருத்தல், கூருணர்வுநிலை.
edging,
கரைக்கட்டு, கரை, விளிம்புத்தொங்கல், விளிம்பமைத்தல்.
edgy
a. கூர்விளிம்புடைய, கூர்மையான, திட்டவட்டமான எல்லைவரையறைப் பாங்குள்ள, எளிதில் சினமூட்டப்பெறத்தக்க.
edibility
n. உணவாகக் கொள்ளும் தகுதியுடைமை.
edible
n. உணவாகக்கொள்ளத்தக்க பொருள், தின்றி, (பெ.) தின்னற்குரிய, உண்ணத்தக்க.
Edible oil
உண் எண்ணெய், சமையல் எண்ணெய்
edict
n. அரச ஆணை, விளம்பரம், அதிகாரத்தைக் கொண்டு அறிவிக்கப்படும் செய்தி.
edification
n. செவியறிவுறுஉ, நல்லறிவுறுத்தல், வாழ்க்கை மேம்பாட்டுக்குரிய நல்லொழுக்கப்போதனை.
edificatory
a. ஒழுக்க மேம்பாடுறச் செய்யத்தக்க.
edifice
n. பெரிய கட்டிடம், மாளிகை, பெருஞ்செயற் கட்டமைவு.
edify
v. ஆன்மிகத்துறையில் பயனடையச்செய், ஒழுக்கத்தில் மேம்படச் செய், சமயத்தில் பற்றுக்கொள்ளச் செய், ஆறுதலளி, மகிழ்வி.
edifying
a. அறிவுறுத்துகிற, மேம்பாடுறச்செய்கிற.
edit
v. பதிப்பி, பதிப்புக்கு வேண்டிய முறையில் எட்டை உருவாக்கு, வகுத்துத்தொகுத்தமை, தேர்ந்து திரட்டியமை, திருத்தியமை, பத்திரிகைப் பதிப்பாசிரியராயிருந்து பணியாற்று.
editio princeps
n. (ல.) ஏட்டின் அச்சிட்ட முதல்பதிப்பு.
edition
n. பதிப்பு, மாறுதலின்றி ஒரு தடவை வெளியிடப்பட்ட ஏட்டுப்படிகளின் தொகுதி, ஒரே அளவில் வெளியிடப்பட்ட தொகுதி, ஒரே சமயத்தில் ஒரே முறையில் வெளியிடப்பட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி, ஒரு தடவை கோத்து அச்சிட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி, ஒரு தடவை கோத்து அச்சிட்ட படிகளின் தொகுதி, ஒரே ஏட்டின் பல படிவங்களில் ஒன்றுத, பதிப்பாசிரியரளித்த மூல எழுத்தாண்மை வடிவம், ஒத்த மறுபடிவம்.
edition deluxe
n. (பிர.) உயர்விலைப்பதிப்பு, அழகிய பதிப்பு.
editor
n. பதிப்பாசிரியர், இதழாசிரியர், செய்தித்தாள் முதலிய வற்றை அல்லது அவற்றின் ஒரு பிரிவினை நடத்துபவர்.
editorial
n. தலையங்கம், தலையங்கக் கட்டுரை, செய்தித்தாளில் அதன் ஆசிரியரால் அல்லது அவர்தம் பொறுப்பில் வேறொருவரால் எழுதப்படும் கட்டுரை, (பெ.) பதிப்பாசிரியருக்குரிய, இதழாசிரியருக்குரிய.