English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
anaconda
n. மாசுணம், மலைப்பாம்பு வகை, பெரிய விலங்குகளையும் உடலை வரிந்து இறுக்கிக் கொல்லத்தக்கபாம்பு வகை.
anacreontic
n. கி,மு,6ம் நுற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அனக்கிரியான் எரனற கவிஞன் வக்ஷ்ங்கிய பாவகை, (பெ.) அனக்கிரியானைப் பின்பற்றிய, காதற்சுவை செறிந்த, களியாட்டப்பண்புடைய.
anacrusis
n. பாட்டின் தொடக்கத்தில் வ அழுத்தமில்லாத அசை.
anacrustic
a. பாடலின் முதலில் அழுத்தமில்லாத அசை வருகிற.
anadem
n. தலைமாலை, கண்ணி.
anadromous
a. முட்டையிட ஆற்றோட்டத்தை எதிர்த்துச் செல்லுகிற.
anaemia
n. (மரு.) இரத்தச்சோகை, குருதியின்மை, இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல், வெளிறிய தோற்றம்.
anaemic
a. குருதிச் சோர்வுடைய, இரத்தச்சோகைஉள்ள, வெளிறிய தோற்றமுடைய, நலிந்த கிளர்ச்சியற்ற, தளர்ந்த.
anaerobe
n. நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
anaerobian
a. நேரடியாக உயிர்வளியில்லாமல் வாழ்கிற, உயிர்வளியில்லாமல் வாழும் உயிர்வகைகளின் செயல் விளைவான, உயிர் மாற்றியலான, உயிர்வளியில்லாமல் வாழும் உயிரினத்தின் செயல் சார்ந்த.
anaesthesia, anaesthesis
n. உணர்விழிப்பு, உணர்ச்சி மயக்கம், உணர்ச்சியின்மை, நோவுணராமை.
anaesthetic
n. மயக்க மருந்து, உவ்ர்வின்மை ஊட்டும் பொருள், (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற, உவ்ர்ச்சியின்மை சார்ந்த.
anaesthetise
v. மயக்க மருந்து கொடு, மருந்து கொடுத்து மயக்கம் உண்டுபண்ணு, உணர்ச்சியில்லாது ஆக்கு.
anaesthetist
n. மயக்க மருந்து கொடுப்பவர்.
anaglyph
n. பள்ளம்படச் செதுக்கப்பட்ட அணிமணிவகை, விழித்திரை வேற்றுமை விம்பங்க்ள, எதிர் நிரப்பு இணைவண்ணக்கண்ணாடிமூலம் ஒரே படமாகப் பார்க்கத்தக்க இருபடப் படிவங்க்ள, ஈரிணை வண்ணப்படம்.
anaglyphic, anaglyptic
a. ஈரிணை வண்ணமான, ஈரிணை வண்ணப்படம் சார்ந்த.
anagnorisis
n. ஆளடையாளம் அறிதல் மூலம் நாடகம் நடுச்செறிவு தளரப்பெற்று முன்னேறுதல்.
anagoge
n. மறை நிலைப்பொருள்கோள், ஆன்மிக விளக்கம் உருவக உட்பொருள் விரித்தல்.
anagogic
a. மறை உட்பொருள் விளக்குகிற.
anagram
n. கரந்துறைமொழி, ஒருசொல்லின் எழுத்துக்களை மாற்றியமைத்து ஆக்கப்படும் வேறொரு சொல்(வினை), சொற் சிதைத்துக்கூட்டு, சொல்லின் எழுத்துமுறை மாற்றிப்புதுச் சொல்லாக்கு.