English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ana
n. வாய்மொழித் தொகுதி, ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி.
anabaptism
n. மறு ஞானஸ்நானக் கோட்பாடு, வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு.
anabaptist
n. மறு ஞானஸ்நானக் கோட்பாட்டாளர், குழந்தைப் பருவத்தில் சமய தீக்கை ஆற்றி இருந்தாலும் வயதுவந்தபின் மறு தீக்கை ஆற்றியே ஆகவேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
anabaptistic, anabaptistical
a. சமய மறு தீக்கைக் கோட்பாடு சார்ந்த.
anabas
n. செதில்களால் மரமேறும் மீன்.
anabasis
n. மேலே போதல், பகைவர் அக எல்லைக்குள் மேற்செலவு, பாரசிகப் பேரரசன் சைரஸ் ஆசியப்படையெழுச்சி பற்றி கிரேக்க வரலாற்றாசிரியர் செனொபன் எழுதியஏடு.
anabatic
a. மேலெழுந்து செல்கிற.
anabatise
v. சமய மறு இணைவு வினையாற்று.
Anableps
a. நீரிலும் காற்றுவெளியிலும் பார்க்கத்தக்க கண்ணமைப்பும் உயிர்ப்புப்பையும் உடைய மீனினம்.
anabolic
a. உயிர்ப்பொருள் கட்டமைப்புச் சார்ந்த, உயிர்ச் சத்து அடிப்படையாக உயிர்ப்பொருள் கட்டமைவதற்குரிய, உயிர்ப்பொருள் ஆக்குவதற்கு உரிய.
anabolism
n. (உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல், உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
anabranch
n. ஆற்றிலிருந்து பிரிந்து ஆற்றிலேயே திரும்ப வந்து விழும் ஓடை.
anacatharsis
n. வாந்தி எடுத்தல்.
anacathartic
n. வாந்தி மருந்து, (பெ.) குமட்டுகிற, வாந்தி எடுக்கத் தூண்டுகிற.
anachronic
a. கால வரிசைக்கு ஒத்துவராத பழமைப்பட்டுப்போன.
anachronism
n. காலக்கணிப்பு வழு, கால இடமுரண்பாடு,பிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும் முற்கால பண்புகளைப் பிற்காலத்திற்கும் தவறாக ஏற்றிக் குழப்புதல், காலக்குளறுபடி, பழமைப்பட்டுப்போன பொருள், காலங் கடந்துவிட்ட செய்தி, தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று.
anachronistic
a. கால வரிசைக்கு ஒவ்வாத, கால முரண்பாடான.
anaclastic
a. ஒளிக்கோட்டம் சார்ந்த, பட்டுத்தெறிக்கிற.
anacoluthia
n. சொல் தொடரியைபின்மை, வாக்கிய வழு,வாக்கியம் முன்பின் ஒத்திசையாமை.
anacoluthon
n. ஒத்தியையாது பிழைபட்டட வாக்கியம்,