English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
amphioxus
n. முதுகெலும்பின் கருமூலத்தடங்களையுடைய முதுகெலும்பில்லாத மீனினவகை.
amphipod
n. நீரருகே வாழும் நண்டு போன்ற உயிரினம்.
amphiprostyle
a. இருமனைகளிலும் நுழைமாடமுள்ள.
amphisbaen
a. கதைகளில் வ இருதலைப்பாம்பு, (வில.) பாம்பு போன்ற அமெரிக்கப் பல்லியினம்.
amphitheatral, amphitheatrical
a. சுற்றுமாளிகையரங்கத்தைச் சார்ந்த, வட்டரங்கம் போன்ற.
amphitheatre
n. சுற்றுமாளிகையரங்கம், திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம், பொது விளையாட்டரங்கு, பொதுக்காட்சிக்கூடம், வட்டரங்கம், அரங்கின் பகுதி, வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம், படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி, போட்டி நடத்துமிடம்.
Amphitryon
n. விருந்தினர்க்கு இன்முகங்காட்டி மகிழ்விப்பவர்.
ampholyte
n. இருவழி மின்பிரி, மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமூலப்பொருளாகவோ அல்லது நேர்மின் எதிர்மின்னாகவோ எவ்வழியும் செயலாற்ற வல்ல மின்பிரிபொருள்.
amphora
n. இரண்டு கைப்பிடிகளுள்ள ரோம அல்லது கிரேக்க கலம்.
amphoric
a. (மரு.) குப்பிக்குட் பேசுவதனால் உண்டாகும் ஒலியைப்போன்ற.
amphoteric
a. இருவழயிலும் அமைந்த, இருவழியின் செயலடைய, மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல.
ample
a. இடமகன்ற, அகலமான, தாராளமான, மிகுதியான, பெரிய, மொத்தையான, போதிய, நெடு நீளமான.
ampliative
a. (அள.) நுண்ணியல் கருத்தினை விரித்து அகலமாக்குகிற.
amplification
n. விரிவு, பெருக்கம்.
amplificatory
a. பெருக்குந்தன்மையுள்ள.
amplifier
n. அதிக்பபடுத்துபவர், பார்வைபடியும் பரப்பினை அதிக்பபடுத்தும் கண்ணாடி விரலலை, (மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிக்பபடுத்தும் கருவி, ஒலி பெருக்கி.
amplify
v. அதிகமாக்கு, பெருக்கு, விரிவாக விளக்கு.
amplitude
n. அகலம், நிறைவு, பெரும்பரப்பு, வீச்சு, வளமை, மதிப்பு, மேன்மை, அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு, (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம், (இய.) அதிர்வு அலையின் வீச்சு, ஊசல் குண்டின் வீச்சு.
ampoule
n. தோலினுக்குள் செலுத்தப்படும் ஊசி மருந்தினை உடைய கண்ணாடிச் சிமிழ்.
ampulla
n. இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை, வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம், (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.