English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
weather-strip
n. வானிலைக் காப்புத் தண்டு.
weather-symbol
n. வானிலைப் பதிவுமுறைக் குறியீடு.
weather-tiles
n. கவிவோடுகள்.
weather-wise
a. காலநிலை மாறுதல்களை முன்னறிவிக்கும் திரனுடைய, முன்னறி திறனுடைய.
weather-worn
a. வானிலைத் தடங்களையுடைய, புயல் முதலியவற்றின் தடங்களையுடைய, நாட்பட்ட.
weathercock
n. காற்றுத்திசை காட்டி, மனவுறுதியற்றவர், (வினை.) காற்றுத் திசைகாட்டியாயிரு, சந்தர்ப்பவாதியாயிரு.
weathered
a. இயல்வளிப்பட்டுப் பதமான, (க-க) தண்ணீர் வடியும்படி சாய்வாகக் கட்டியமைக்கப்பட்ட, (மண்.) இயல்வளி நிலைமாற்றங்களால் மேற்பரப்பில் பண்பு படிவ ஆக்க மாறுபாடுகளுற்ற.
weathering
n. காற்றுவாட்டச் செலவு, வானிலைப்பாடு, (மண்.) வானிலைப்பதம், (க-க) கட்டுமான முகட்டுத் தளச் சாய்வு, (அரு.) வானிலைகள்.
weatherize
v. துணி வகையில் வானிலைக் காப்புடையதாக்கு.
weatherly
a. கப்பல் வகையில் காற்றுவீசும் பக்கமாக விலகிச் செல்லாத, காற்று எழும் திசைநோக்கிச் செல்லக்கூடிய.
weathermaster
n. உறைபனி குலைவுப்பொறி.
weathermost
a. காற்று எழுந்திசையில் மிகு தொலைவிலுள்ள.
weave
n. நெசவுப்பாணி, (வினை.) நெய், நெசவுத் தொழிலாற்று, நுலால் செய்து துணியாக்கு, செய்திகளைப் புனைந்து கதை உருவாக்கு, விவரங்களைப் புகுத்திக் கதைகட்டு, செய்யுளியற்று, சதிசெய், சூழ்ச்சி பண்ணு, (பே-வ) ஏய்த்துப்பசப்பு.
weaver
n. கோடிகர், நெசவாளர், துணி நெய்வோர், தூக்கணங் குருவி.
weaver-bird
n. தூக்கணங்குருவி.
web
n. தோலிழைமம், இயந்திரச் சுழல் விசிறி அலகு, இறகின் இழைத்துய், நுலாம்படை, நெய்வீடு, நெசவில் நெய்து எடுத்த ஓர் ஈட்டுத்துணி, மெல்லாடை, மெல்லிழைவுத்துணி, இயந்திரப்பகுதி இடையிணைப்புத் தகடு, அச்சுகத்தாள் நீள்சுருள், நுண்பொறி, வலை, சூழ்ச்சி, (வினை.) தோலைழைமத்தால் இணை, தோலிழைமம் இணை,தோலிழைமத்தில் பொதி.
web-eye
n. கண்படலநோய், கண்பூக்கோளாறு.
web-eyed
a. கண்படல நோயினையுடைய.
web-fingered
a. தோலடி உகிர்கள் வாய்ந்த.