English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
wealthy
a. செல்வச் சிறப்புடைய.
wean
-1 n. ஸ்காத்லாந்து வழக்கில் குழந்தை.
weanling
n. பால்மறப்புப் பிள்ளை.
weapon
n. படைக்கலம், வெற்றியடைதற்கான செயல்.
weaponeer
n. (படை.) அணுக்குண்டு ஆக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்.
wear
-1 n. ஆடையணி, உடுத்துதல், உடை, உடுக்கப்பெறல், ஆடைகளாகப் பயன்படுத்தப்படுதல், அணியப் பெடும் பொருள், காலத்தில் வழங்கப்படும் உடை, ஏற்ற ஆடை, வழங்கீட்டுத் தேய்மானம், தேய்மானத்தை எதிர்த்துத் தாங்குந் திறன், (வினை.) ஆடை உடுத்துக்கொள், அணிமணி தரித்துக்கொள், பூண் ஆணி, முடி முதலியன மாட்டிக்கொள், புதையரணம் மூக்குக்கண்ணாடி முதலியன மாட்டிக்கொள், நிற ஆடை மேற்கொள், தோற்றம் மேற்கொள், சின்னம் பூண்டு மதிப்புக்ட்டு, பண்பு பூண்டு அருமைப்பாடு காட்டு, கப்பல் வகையில் கொடி பறக்கவிடு, வழங்கிப் பழமைப்பட்டதாக்கு, பயன்படுததித் தேய்வுறுத்து, பயனீட்டினால் சேதப்படுத்து, மேற்புறத்தை அரித்துத் தேய்வி, அரித்தழி, துடைத்தழி, மெல்லியதாக்கு, குறை, நிலைமாறச் செய், பயனீட்டால் தேய்வுறு, பட்டுத் தேய்வுறு, நாட்பட்டுச் சேதமுறு, மாறுதலடை, பயனீட்டால் மாறுதலுறு, பயனீட்டால் மாற்றியமை, உரம் அழியச்செய், சோர்வடைவி, களைப்படைவி, சோர்வடை, களைப்படை, விடாப்பிடியிலிருந்துஅடக்கு, நீடித்திரு, நீடித்துழை, குறிப்பிட்டகாலம் வரை தாங்கு, நெடுங்காலம் பதங்கெடாதிரு, கால வகையில் மெதுவாகச் செல், சோர்வுண்டாக்கும் வகையில் ஊர்ந்து செல், கால வகையில் பையப்பையக் கழித்துவிடு, பையப்பையக் கழிவுறு, தேய்த்துத் தடம் உண்டுபண்ணு, கைபடப்பழக்கித் தேய்வுறுத்து, கையாடித் தடம் உண்டு பண்ணு, தேயத்துக்கிழி, தேய்த்துத் துளை உண்டுபண்ணு, உடைமையாகப் பெற்று நுகர், உள்ளத்தில் வைத்துப் பூசி.
wearable
a. அணியத்தகுந்த, மேற்கொள்ளத்தக்க, தேயக்கூடிய.
weariless
a. சோர்வுறாத, இடைவிடாத, ஓயாத.
weariness
n. களைப்பு, சோர்வு, தளர்ச்சி.
wearing-apparel
n. உடுக்கை.
wearing-iron, wearing-plate
n. உராய்வு காப்புத் தகடு.
wearisome
a. களைப்புண்டாக்குகிற, சோர்வு தருகிற, சலிப்பூட்டுகிற.
weary
a. களைப்புற்ற, சோர்வுற்ற, வலுக்குறைந்த, சலிப்புக் கொண்டு வெறுப்புற்ற, சோர்வுறச் செய்கிற, (வினை.) களைப்பூட்டு, சோர்வுறுவி, சலிப்படை, ஸ்காத்லாந்து வழக்கில் ஏங்குறு, வேணவாக்கொள்.
weasand
n. (பழ.) மூச்சுக்குழல், தொண்டை.
weasel
n. மரநாய் வகை, (படை.) அருந்தடக்கலம், பனிமணல் முதலிய அருந்தடங்களில் செல்லத்தக்க கலந்தாங்கு கலம்.
weather
n. வானிலை, தனி இடத் தனிவேளை வளிமண்டல நிலை, ஈர்ம்பதக் குளிர்வாடை நிலை, காற்றின் திசை, காற்று விசையாலையின் பாய்த்திரையின் சாய்வுக்கோண அளவு, (பெ.) (கப்.) காற்றுத்திசையிலுள்ள, (வினை.) திறந்த நிலையில் இயனிலை மாறுதல்களுக்கு உட்படுத்து, இயனிலை மாறுதல்களால் கறைப்படுவி, இயனிலை மாறுதல்களால் தேய்வுறுவி, இயனிலைச் சூழல்களால் கறைப்படு, இயனிலை மாறுதல்களால் தேய்வுறு, (மண்.) திறந்த நிலை இயல்வெளி மாறுதல்களுக்குரிய தேய்வு-நிறமாறுதல் முதலிய விளைவுகள் வருவி, (கப்.) கப்பல் அல்லது பயணிகள் வகையில் நிலக்கூம்பு கடந்து காற்றுத திசைவாக்காகச் சென்று சேர், புயல் கடந்து பாதுகாப்புடன் சென்று சேர், இடர்ப்பாடுகள் கடந்து பாதுகாப்பாக வெளியேற, மோட்டு ஓடுகள் பலகைகள் வகையில் ஒன்றன் மீது ஒன்று பாதியளவு மேற்கவிவாக்கு.
weather-beaten
a. இயல்வளியில் அடிபட்ட, காற்று மழை வெயில் முதலியவற்றால் தாக்குண்ட.
weather-board
n. கப்பலின் காற்றுவரும் பக்கம், மழையைத் தடுப்பதற்காகக் கப்பலின் சாளரத்தில் வைக்கப்படும் பலகை, கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடுமாறு அமைக்கப் படும் பலகை, (வினை.) கப்பற் சாளரத்தில் மழை தடுப்புப் பலகை பொருத்து, கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடும் பலகை பொருத்து.
weather-bound
a. வானிலை காரணமாக வெளியே போகாமல் தங்கிவிட்ட.