English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
web-fingers
n. தோலடி விரல்கள், செயற்கையாகத் தோலிணைப்புச் செய்யப் பட்ட விரல்கள்.
web-foot
n. தோலடி, தோலிழைம இணைப்புடைய விரல்களுடன் கூடிய காலடி.
web-toed
a. தோலடி வாய்ந்த.
web-toes
n. pl. தோலடி உகிர்கள், தோலிழைமங்களால் இணைக்கப்பட்ட கால்விரல்கள்.
web-wheel
n. மென்தகட்டாரச் சக்கரம், கைக்கடிகாரவகையில் முழுதும் ஒரே பாளத்தில் உருவாக்கப்ட்ட மென் தகட்டுச் சக்கரம்.
web-worm
n. இழைவலைப்புழு, தானே நுற்றிழைத்தவலையிலிருந்து உணவுண்டு வாழும் பூச்சியின முட்டைப்புழு.
webbed
a. தோலிழைமம் பொதிவுடைய.
webbing
n. சேண வரிக்கச்சை, குதிரையின் வயிற்றுப் பட்டை, மென்துகில் திண்வரியிழை.
wed
-1 v. மணந்துகொள், மணம்புரி, ஒருங்கிணைவி, பணிக்கடம் பூணுவி.
wedded
-1 a. மணத்திற் கொள்ளப்ட்ட, மணவாழ்க்கை சார்ந்த, ஒருங்கிணைக்கப்பட்டுள்ள, இணைபிரிக்கமுடியாப் பற்றுக்கடம்பூண்ட.
wedding
n. மணவினை, திருமணவிழா.
wedge
n. ஆப்பு, செருகு கட்டை, செருகுதண்டு, இரட்டைச் சாய்வு தளங்களையுடைய இயந்திர ஆற்றற் கருவி, ஆப்புவடிவப் பொருள், ஆப்பு வடிவ அப்பக்கீற்று, ஆப்பு வடிவப்படையணி, ஆப்புவடிவ முனையுடைய வளைபந்தாட்ட மட்டை வகை, முற்கால வரிவடிவ முறையின் ஆப்புவடிவ வரைக்கீற்று, இடைவளைவற்ற ஆப்புவடிவ மிதியடி, (வினை.) ஆப்பிடு, ஆப்பிட்டு இறுக்கு, இடையாட்டுப்பிள, செருகுகட்டையிடு, செருகி நுழைத்துவை, இடையிடை நுழைத்துவை, நெருக்கிப் புகுத்து, நெருக்கிக்கொண்டு நுழைவுறு, ஆப்புப்போல் இறுக்கமுறு, ஆப்புப்போன்றதாக்கு.
wedgie
n. மகளிர்க்குரிய தட்டையடிப் புதைமிதி.
wedging
n. பலகை இணைப்பு வகையில் ஆப்பிணைப்பு முறை.
Wedgwood
n. அரைகுறைகப் பளிங்கியல் ஆக்கப்ட்ட மட்பாண்ட வகை.
wedlock
n. திருமண இணைவுறவு, மணவாழ்க்கை.
wee
a. சின்னஞ்சிறிய, கடுகளவான.
weed
n. களைச்செடி, வேண்டாச்செடி, காட்டு வளர்ச்சிச் செடி, காட்டுப்புதர்ச்செடி, களைப்புதர் வளர்ச்சி, (பே-வ) புகையிலை, (பே-வ) சுருட்டு வகை, நோஞ்சல் குதிரை, ஒல்லியானவர், கவைக்குதவாதவர், உதவா விலங்கு, அருமைப்பாட்டு வழக்கில் நொய்தான சிறு குழந்தை, (வினை.) களை பறி, களைச்செடிகள் அகற்று,களையை வேரோடகற்று, வேண்டாதன விலக்கு, வேண்டாதவரை ஒழி, தொகுதியில் கீழ்த்தரங்களைப் பிரித்தழி.
weeded
a. களையகற்றப்பட்ட.