English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
undermine
v. கீழறு, அடிநிலம் அரித்து வீழ்த்து, கடைகால் தகர், மறைகேடு செய், மறைசூழ்ச்சியால் அழி, கண்டுபிடிக்க முடியா வகையில் தீங்கு செய்.
underminer
n. கீழறுப்பவர், அரிப்பவர், கீழறுப்பது, அரிப்பது, அழிவுக்காரர், அழிவுப்பொருள், மறைசூழ்ச்சியாளர்.
undermining
n. கீழறுப்பு, அடியறுத்தழிப்பு, அடியறுப்பழிவு, மறை சூழ்ச்சி அழிவுவேலை, (பெ.) கீழறுக்கிற, அடியரிக்கிற, அடியறுத்தழிக்கிற, மறைசூழ்ச்சி செய்தழிக்கிற, அடியரித்துக் கெடுக்கப் பார்க்கிற.
undermost
a. கீழ்க்கோடியான, மிகவும் கீழ்நிலையிலுள்ள.
undern
n. முற்பகல், பிற்பகல் முற்பகுதி, (அரு.) காலை ஒன்பது மணி வேளை, சிற்றுணா, கைம்மைச் சிறுவாடு, ஸ்காத்லாந்து சட்டவழக்கில் கணவன் மரபுரிமை வருவாயில் விதவை மனைவிக்குரிய மூன்றில் ஒரு பங்கு.
underneath
n. கீழ்ப்பரப்பு, அடிப்பகுதி, (பெ.) கீழ்ப்பகுதியிலுள்ள, அடிப்பகுதிக்குரிய, (வினையடை.) கீழே, அடியில், கீழாக, அடியூடாக.
undernote
n. அடங்கிய தொனி, (இசை.) உட்சுரம்.
undernoted
a. கீழே குறிப்பிட்ட.
underntime
n. நண்பகல் உணவு நேரம்.
underpaid
a. போதாச் சம்பளத்திற்கு உழைக்கிற.
underpass
n. அமெரிக்க வழக்கில் அடிநிலவழி, சுருங்கை, இருப்புப்பாதை வழி.
underpassion
n. உள்ளீன உணர்ச்சிவேகம், அடங்கிய உணர்ச்சி வேகம்.
underpay
v. குறை சம்பளங்கொடு, குறைவாகக் கட்டு.
underpayment
n. குறைவாகப் பணஞ் செலுத்துகை, குறைசம்பளம்.
underpeopled
a. குறை மக்கள் தொகையுடைய, போதாமக்கள் எண்ணிக்கையினையுடைய, வாழ்குடி குறைவான.
underpin
v. (க-க) கீழ்க்கட்டுமான ஆதரவு அமை, கீழ்க்கட்டுமானத்தால் தாங்கு.
underpinning
n. அடியுதைவுக் கட்டுமானம்.
underplay
-1 n. அடிச் சீட்டாட்டம், உயர்சீட்டிருக்கும் போது தாழ்ந்த சீட்டை ஆடுதல், மறைநுட்ப அலையியக்கம், கண்காணாப் பின்னணியிக்கம்.
underplot
n. கட்கதை, உள்ளீடான கதைப்பகுதி, உட்சூழ்ச்சி, பொறிச்சூழ்ச்சி.
underpraise
v. தகுதிக்குக் குறைவாகப் புகழ்.