English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
underhanded
a. மறைமுறையான, இரண்டகத்தன்மை வாய்ந்த, வேலை வகையில் ஆட்கறைவுடைய, ஆள்முடையான, (வினையடை.) மறைமுறையாக, நயவஞ்சகமாக, வேலை வகையில் ஆள்முடையாக.
underhung
a. மோவாய் வகையில் மேற்செருகலான, மேல்வாய் கடந்து கீழ்வாய் செல்கிற, துருத்து கீழ்வாயுடைய, கீழ்த்தண்டவாளத்தின்மேல் உருள்கிற.
underjawed
a. கீழ் மோவாய் தடித்த, கீழ் மோவாய் முன்துருத்தி முனைப்பாயிருக்கிற
underlaid
v. 'அண்டர் லே (2)' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
underlain
v. 'அண்டர் லீ' என்பதன் முடிவெச்சம்.
underlay
-1 n. அடி ஆதாரம்,அடித்தாங்கல், அடிக்கிடைத்தாள், அச்செழுத்துருக்களை உயரப்படுத்துவதற்காக அவற்றின் அடியில் வைக்குந்தாள், கம்பள அடிவைப்பிற்குரிய நீர்காப்புத்தாள், நீர்காப்பு அடி விரிப்பட்டை, (சுரங்.) சாய் உலோகக் கருப் பாறை, சாய் சுரங்க வழி.
underlayer
-1 n. அடியடுக்கு அடியடை, அடித்தளப்பகுதி, அடிப்படை.
underlease
-1 n. கீழ்க்குத்தகை.
underlet
v. குறைமதிப்பான குடிக்கூலிக்கு விடு, கீழ்க்குடிக்கூலிக்கு விடு.
underletter
n. கீழ்க்குடிக்கூலிக்கு விடுபவர், குறை குடிக்கூலிக்கு விடுபவர்.
underlie
v. அடியிற் கிட, உள்ளீடாயிரு, அடிப்படையாய் அமைவுறு.
underlinen
n. உள்ளாடை, சில்லறை உள்ளாடை.
underling
n. கீழாள், கொத்தடிமை.
underlying
a. கீழுள்ள, அடியிலுள்ள, அடிநிலையான, உள்ளார்ந்த, கூர்ந்து கவனித்தாலன்றி வெளிப்படையாகத் தெரியாத, ஆதாரமான, அடிப்படையான, மூலாதாரமான.
underman
-1 n. கீழாள், துணையாள், கீழ்ப்படியினர், அவலநிலைப்பட்டவர்.
undermanned
a. பணியாட்கள் போதாமல் நடத்தப்படுகிற.
undermasted
a. (கப்.) மிகச்சிறு பாய்மரமுடைய, (கப்.) பற்றாக்குறைப் பாய்மரமுடைய.
undermentioned
a. கீழே குறிக்கப்பட்ட.