English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ticking
n. முரட்டு மெத்தை உறைத்துணி.
tickle
n. அக்குளுப்பு, மெய்க்கூச்ச உணர்ச்சி, மரப்பந்தாட்டத்தில் பந்துமட்டை உராய்வு, (வினை) அக்குளுத்தல் செய், மெக்கூச்சமுண்டாக்கு, நரம்புக்கிளர்ச்சியும் நகைப்பும் தோன்றும்படியாக இலேசாகத்தொடு, அக்குளுப்பு உணர்ச்சி பெறு, இதமாக உணர்ச்சி கிளறிவிடு, வேடிக்கை காட்டு, பொழுதுபோக்காக மகிழச் செய், மீன் வகையைக் கையினாற் பிடி.
tickler
n. அக்குளுப்பவர், கூச்சமுண்டாக்குவது, திகைப்பூட்டுகிற செய்தி, நுண் கல், நுட்ப நுணுக்கம் வாய்ந்த பிரச்சினை, இறகுத்தூரிகை.
ticklish
a. எளிதிற் கூச்சம் உண்டுபண்ணுகிற, எளிதில் அக்குளுப்புக்கு ஆளாகிற, அக்குளுப்பு வகையில் கூருணர்விடைய, அருநுட்பம் வாய்ந்த, நுட்ப நுணுக்கமான, கவனமாகக் கையாள வேண்டிய.
ticpopong
a. புள்ளி விரியன், கொடு நச்சுப் பாம்பு வகை.
tidal
a. வேலை ஏற்ற இறக்கஞ் சார்ந்த, வேலை ஏற்ற இறக்கத்தினைப் பொறத்து உண்டான, வேலை ஏற்ற இறக்கத்தினால் இயக்கப்படுகிற, ஏற்ற இறக்கமுடைய, பொங்குதலும் வடித உடைய.
tiddler
n. குழந்தை வழக்கில் சிறு முள்மீன் வகை.
tiddly-winks
n. வட்டுச் சுண்டாட்டம், மேசையின் நடுவிலுள்ள தட்டத்தில் விழும்படி சிறுவட்டச் சில்லுகள் விரலினாற் சுண்டியெறியப்படும் ஆட்டவகை.
tide
n. வேலை அலைவு, வேலை ஏற்ற இறக்கம், பொங்கோதம், வீங்கு நீர்வேலி, பருவம், தறுவாய், வாய்ப்பு, செவ்வி, வாய்ப்பு வேளை, விழா, காலம், ஒழுக்கு, நீரோட்டம், (செய்) வெள்ளம், (செய்) ஆறு. (செய்) கடல், (வினை) வேலை அலைவில் அலைவுறு, வலை அலைவின் போக்கிற் செல், வேலைஅலைவியக்கத்ரேதாடு துறைமுகத்தின் உள்ளும் புறம்புஞ் செல், வேலை அலைவுமூலஞ் செயலாற்று, வேலை அலைவைப் பயன்படுத்திக்கொண்டு காரியமாற்று,. வேலை அலைவெனப்பாய், வேலை அலைவெனக் கொண்டுசெல், வேலை அலைவைப் பயன்படுத்தி வழிதொடர், இடக்குகளைக் கடந்து செல், ஏறிக்கடந்துசெல், கடந்த சன்ளித்து வெற்டறிகொள்.
tide-lock
n. வெள்ளப்பூட்டமைவு.
tide-rip, tide-rips
வேலைநீர் அமளி, எதிரெதிர் வேலை அலைவு, நீரோட்டங்களினால் தோன்றும் கடல் கொந்தளிப்பு நிலை.
tide-table
n. வேலை அலைவுக்கால அட்டணை.
tide-waiter
n. துறைமுப்ச் சுங்கக் கப்பல்துறை காவலர், துறைமுப்த்திற்கு வந்நததும் சுங்க விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காகக் கப்பலில் ஏறும் சுங்க அலுவலர்.
tide-way
n. வேலை அலைவு நெறிக்கால்.
tidegate
n. வேலை மதகுவாய்.
tidesman
n. துறைமுகச் சுங்கக்காவலர், துறைமுகக் கப்பல்களிற் சென்று சுங்டகம் பிரிப்பவர்.
tidings
n. pl. செய்தி, செய்தி, விவரம்.
tidology
n. வேலை அலைவாய்வு நுல்.,
tidy
n. சாய்மான அணியுறை, நாற்காலிச் சாய்வக ஒப்பனையுறை, தும்புக்கலம், (பெயரடை துப்புரவான, விருத்தியான, நேர்த்தியான, செப்பமிக்க, செந்நலஞ் சான்ற, ஒழுங்கமைதி வாய்ந்த, சீரமைவான, தோற்றமுடைய, மட்டியல் நலமுடைய, மட்டான உல்ல் நலமுடைய, அப்பழுக்கற்ற, தோற்ற வகையில் செஞ்சீரான, ஆடை வகையில் சீரொழுங்கான, அறை வகையில் தூய்மைப்பாடான, பழக்கவழக்க வகையில் திருந்திய, நடைவகையில் நல்லாக்கமான, பழக்கவழக்க வகையில் நடையுடை தோற்ற அமைதி குன்றாத, (வினை) துப்புரவாக்கு, சீராக்கு, திருந்த அமைவி, சீர்திருத்தியமை, செப்பஞ் செய்.